|
வெருள விடுத்து - இந்த
மணவிழாவின் ஆரவாரத்தினாலே கயிற்றையறுத்து
வெருண்டோடச் செய்து, இவன் ஆவி கவர்க என்றான் - இவனுயிரை
வௌவுவேமாக என்றான்.
சாறு
- விழா. ஈற்றா - கற்றினையீன்ற அணிமையையுடைய பசு;
புனிற்றா, கவர்கவென வியங்கோள் தன்மைக்கண் வந்தது; அகரந்தொகுத்தல்;
கவர்கும் என்னும் தன்மைப் பன்மை விகாரமாயிற்றுமாம். பார்ப்பனி உயிரை
எங்ஙனம் கவர்ந்தேமோ அங்ஙனம் இவனாவியைக் கவர்வேம் என்றானென்க.
(37)
அந்தமொழி
கேட்டரச னருமறையோய் கேட்டனையோ
இந்தமொழி யெனப்பனவ னிவனிவ்வா றிறந்தாலென்
பைந்தொடியா ளிறந்ததுமப் படியேயென் மனக்கவலை
சிந்தவிது காண்பேனென் றொருங்கிருந்தான் றென்னனொடும். |
(இ
- ள்.) அந்த மொழி அரசன் கேட்டு - அவ் வார்த்தையை
மன்னவன் கேட்டு, அரு மறையோய் - அரிய வேதங்களையுணரும்
அந்தணனே, இந்த மொழி கேட்டனையோ என - இவ் வார்த்தையைக்
கேட்டாயோ என வினவ, பனவன் - அப்பார்ப்பனன், இவன் இவ்வாறு
இறந்தால் - இம்மணமகன் இங்குக் கூறியவாறே இறந்து படுவானாயின்,
என் பைந்தொடியாள் இறந்ததும் அப்படியே - என் மனைவி இறந்ததும்
அங்ஙனமே தான், என் மனக் கவலை சிந்த இது காண்பேன் என்று -
எனது மனத் துன்பங்கெட இந்நிகழ்ச்சியைக் காண்பேனென்று கூறி, தென்னனொடும் ஒருங்கு
இருந்தான் - பாண்டியனோடும் ஒரு சேர இருந்தனன்.
அப்படியே
- அங்ஙனமேயென்பது உண்மையாகும். (38)
ஒட்டியபல் கிளைதுவன்றி யொல்வொலிமங் கலந்தொடங்கக்
கொட்டியபல் லியமுழங்கக் குழுமியவோ சையின் வெருண்டு
கட்டியதாம் பிறப்புனிற்றுக் கற்றாவொன்* றதிர்ந்தோடி
முட்டியதான் மணமகனை முடிந்ததா லவனாவி. |
(இ
- ள்.) ஒட்டிய பல் கிளைதுவன்றி ஒல்லொலி மங்கலம் தொடங்க
- நெருங்கிய பல சுற்றத்தாரும் சேர்ந்து ஒல்லெனும் ஒலியுடன்
மணவினையைத் தொடங்கவும், கொட்டிய பல் இயம் முழங்க - அகப்பட்ட
பல் இயங்களும் ஒலிக்கவும், குழுமிய ஓசையின் - இவை ஒருங்கு தொக்க
வேரொலியால், கட்டிய தாம்பு இற - கட்டப்பட்ட கயிறு அறுமாறு, புனிற்றுக்
கன்று ஆ ஒன்று - இளங் கன்றினையுடைய பசு ஒன்று, வெருண்டு அதிர்ந்து
ஓடி மணமகனை முட்டியது - அஞ்சி அலறி மணமகனை முட்டியது; அவன்
ஆவி முடிந்தது - அவன் உயிர் முடிந்தது.
ஒட்டிய
- அணுகிய. மங்கலந் தொடங்க - கடிசூத்திரம் அணியத்
தொடங்குகையில் என்றுமாம். கொட்டப் பட்டனவாகி முழங்கவென்று
(பா
- ம்.) * எதிர்ந்தோடி.
|