|
உள்ளதன் உண்மையை,
இருந்த படி இருந்த - உள்ளபடி இருந்த, காட்டி
காண்பித்து, சொல்லாமல் சொன்னவரை - குறிப்பாலுணர்த்திய
தட்சிணாமூர்த்தியை, நினையாமல் நினைந்து - இடையறாமல் நினைந்து,
பவத்தொடக்கை வெல்வாம் - பிறவிக்கட்டாகிய பகையை வெல்வாம்
எ - று.
நான்மறை - இருக்கு, எசுர், சாமம், அதர்வணம் என்ப; தைத்திரியம்,
பௌடிகம், தலவகாரம், சாமம் எனலுமாம், ஆறங்கம் - சிட்சை,
வியாகரணம், நிருத்தம், கற்பம், சந்தம், சோதிடம் என்பன; இவை
வேதத்திற்கு உறுப்புக்கள் போறலின் வேதாங்கம் எனப்படும்; இதனை,
"கற்பங்கை சந்தங்கா
லெண்கண்
தெற்றெ னிருத்தஞ் செவி சிக்கை மூக்
குற்ற வியாகரண முகம் பெற்றுச்
சார்பிற் றோன்றா வாரண வேதக்
காதியந்த மில்லை" |
என மணிமேகலை
கூறுவதாலும் அறிக. முதல் என்றதனால் அற நூல்
புராணம் முதலாயின கொள்ளப்படும். கேள்வி என்பது கேட்டல் எனப்
பொருள்படுதலன்றிக் கல்வி யெனவும், வேதம் எனவும் பொருள்படும்.
நால்வர் - சனகர், சனாதனர், சனந்தரன், சனற்குமாரர் எனுமிவர். இறைவன்
வாக்கிறந்து நிற்றலை மாற்ற மனங்கழிய நின்ற மறையோன் சொற்பதங்
கடந்த தொல்லோன் என ஆளுடைய அடிகள் அருளுமாற்றானறிக.
வேதம் முதலிய கலைகளெல்லாம் பாசஞான மாகலானும், இறைவன்
பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரன் ஆகலானும்
மறைக்கப் பாலாய் என்றார். இறைவன் எல்லாமா யிருத்தலை,
"இருநிலனாய்த்
தீயாகி நீருமாகி
யியமான
னாயெறியுங் காற்றுமாகி
அருநிலைய திங்களாய் நாயி றாகி
யாகாச
மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமு பெண்ணு மாணும்
பிறருருவுந்
தம்முருவுந் தாமேயாகி
நெருநலையா யின்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிக ணின்ற வாறே" |
எனவும், அல்லதுமா யிருத்தலை,
"விரிகதிர்
நாயிறல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணுநிலனுந்
திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர் தெளிநீரு மல்லர் தெரியில்
அரிதரு கண்ணியாளை யொருபாக மாக வருள்காரணத்தில் வருவார்
எரியர வாரமார்பரிமையாரு மல்ல ரிமைப்பாரு மல்ல ரிவரே" |
எனவும் திருநாவுக்கரசு
சுவாமிகள் அருளிச்செய்தமை காண்க :
| "ஒன்றுநீ யல்லை
யன்றியொன் றில்லை யாருனை யறிகியற் பாரே" |
|