|
பால் துலைபெற - பூமியியன்
தென்பாகமானது துலாக்கோல் போலும் சமன்
பெறும்படி, நிறுத்த களைகணே - நிறுத்திய பற்றுக்கோடே, என்று - என்று
கூறி, சுருதி ஆயிரம் எனத் துதித்தார் - அளவிறந்த வேதங்கள் கூடித்
துதித்தாற் போலத் துதித்தார்கள் எ - று.
கொலைபுரி
தரும மூர்த்தியே, குன்றடக்கிய தவக்குன்றே, கடல்
குடித்த அருட்பெருங் கடலே என்பவற்றிலுள்ள நயங்களை ஓர்ந்துணர்க:
தரும மூர்த்தியாகலின் கொலை பரிந்தனர், தவக்குன்றாக் கொள்க. தமிழ்க்
கொண்டல் - தமிழைச் சுரந்து பொழியும் முகில். ஆயிரம் - அளவின்மை.
வாதாவி
வில்வலனைக் கொன்ற வரலாறு :- அசமுகி யென்னும்
அசுரமாது நாரதமுனிவனை வலிதிற் கூடி வில்வலன் வாதாவி யென்னும்
இருமைந்தரைப் பெற்றாள். அவ்விருவரும் கொடியதோர் வேள்வி புரிந்து
பிரமன்பால் வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொண்டு, காட்டிலே அவ்வழி
வரும் முனிவர்களைக் கொல்லுங் கருத்தினராய்ப் பன்னசாலை யமைத்துக்
கொண்டிருந்தனர்;' இருப்புழி வில்வலன் தவவேடந் தாங்கி, வாதாவியை
ஆடாக்கி வருகிற முனிவர்களுக்கு விருந்து செய்து, வாதாவியை வருகவென
அழைக்க, அவன் அம் முனிவர்களின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு
வெளியே வர, இவ் வகையாக அவர்களைக் கொன்று தின்று வாழ்ந்து
வந்தனர்; வர, இவ் அகத்தியர் இங்ஙனம் விருந்துண்டிருந்தபொழுது,
வில்வலன் வாதாவியை அழைக்க, அகத்தியர் உண்மையை யுணர்ந்து,
வாதாவியை வயிற்றிலே மடிவித்து, எதிர்த்துப் பொருதற்கு வந்த
வில்வலனையும் ஓர் தருப்பைப் புல்லை அத்திரமாக விடுத்துக் கொன்றனர்
என்பது. இதனைக் கந்தபுராணத்து வில்வலன்
வாதாவிவதைப் படலத்திற்
காண்க.
விந்த
மடக்கிய வரலாறு :- ஒரு காலத்து விந்தமலையானது நாரத
முனிவரின் சூழ்ச்சியால் மேருமலையுடன் இகலி வளர்ந்து, சூரிய சந்திரரும்
இயங்கா வகை வானின் வழியை அடைத்து நின்றது; அப் பொழுது
தென்றிசை நோக்கி வந்த அகத்தியர் தமக்கு வழிவிடுமாறு விந்தத்தை
வேண்ட, அது சிறிதும் அவரை மதியாது 'வழிவிடேன்' எனச் செருக்கிக்
கூற, குறியவராகிய அம்முனிவர் தமது கையை உயர்த்தி அம்மலையின்
தலையில் வைத்து அழுத்தினர்; அரு செருக்கழிந்து பிலத்திற் புக்கது
என்பது இதனைக் கந்தபுராணத்து, விந்தம்
பிலம்புகு படலத்திற் காண்க.
புவியைச்
சமனுறச் செய்த வரலாறு :- சிவபெருமான் திருமணத்திற்குத்
தேவர் முதலிய யாவரும் வந்து திரண்டமையால் வடதிசை தாழ்ந்து
தென்றிசை யுயர்ந்தது; யாவரும் நடுக்க மெய்தினர்; சிவபெருமான்
அகத்தியரை யழைத்து அவரைப் பொதியிலிற் சென்றிருக்குமாறு
பணித்தனர்; அகத்தியர் பொதியிலுக்கு வரவே பூமி சமனாயிற்று என்பது
இதனைக் கந்தபுராணத்து, திருக்கல்யாணப்
படலத்திற் காண்க
. கடல்குடித்த
வரலாற்றை இப்புராணத்து, இந்திரன் பழிதீர்த்த
படலத்திற் காண்க. (21)
|