பக்கம் எண் :

இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் 159



பொரு பழி துடைத்தோன் - வருத்தும் பழியினைப் போக்கினவனும், சோதி
விரிமருந்து உடல் வான் திங்கள் மிலைந்தவன் அருளின் - ஒளிவிரிந்த
அமிழ்தமயமாகிய உடலையுடைய வான் மதியைச் சூடியவனுமாகிய
சோமசுந்தரக்கடவுளின் திருவருளால், அடல் அரிக் குருளை அன்னான் -
வலிமிக்க சிங்கக் குட்டிபோன்ற, அரிமருத்தனனாம் தென்னன் வந்தான் -
அரிமருத்தன னென்னும் பாண்டியன் - மகனாக வந்து தோன்றினான்.

     இறைவன் அட்ட மூர்த்தியாதலை,

"இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி யியமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி யாகாய மாயட்ட மூர்த்தி யாகி"

என்னும் திருத்தாண்டகத்தாலறிக. மருத்துவன் - இந்திரன். மருந்து மருத்து
என வலித்தது. திங்கள் மிலைந்தவன் அருளினாலே குலேசன் செய்த தவம்
உருத்திரிந்தாலென்ன அரிமருத்தனனாந் தென்னன் வந்தான் என்க. (37)

              (கலிநிலைத்துறை)
பரிசிலைப் புலவருக் கருள்குலே சன்பல பகல்கழீஇத்
திரிமருப் பிரலைவெம் மழுவெடுத் தவன்மதிச் சென்னிமேல்
வரிசிலைப் படைபொறித் தவனெனப் பெறுவர மைந்தனாம்
அரிமருத் தனனிடத் தவனிவைத் தரனடி யெய்தினான்.

     (இ - ள்.) பரிசிலைப் புலவருக்கு அருள் குலேசன் - புலவர்கட்குப்
பரிசில் அளித்த குலேசபாண்டியன், பலபகல் கழீஇ - பல காலங்களைக்
கழித்து, திரிமருப்பு இரலை வெம்மழு எடுத்தவன் - திரிந்த
கொம்பினையுடைய மானையும் கொடிய மழுவையும் ஏந்திய இறைவனது,
மதிச்சென்னிமேல் - பிறை முடியின் மேல், வரிசிலைப் படை பொறித்தவன்
என - கட்டமைந்த விற்படையினால் அடித்த அருச்சுனன் போல, வரம்
பெறு மைந்தனாம் அரிமருத்தனனிடத்து - வரம் பெறும் புதல்வனாகிய
அரிமருத்தன னிடத்தில், அவனி வைத்து அரன் அடி எய்தினான் -
நிலவுலகை வைத்து விட்டு இறைவன் திருவடி நீழலை அடைந்தான்.

     இடைக் காடர்க்கும் ஏனைச் சங்கப் புலவர்கட்கும் பரிசில்
வழங்கினமையைச் சுட்டி 'பரிசிலைப் புலவருக் கருள் குலேசன்' என்றார்.
கழீஇ - கழித்து; சொல்லிசையளபெடை. பாண்டு மைந்தனாகிய அருச்சுனன்
பகைவரை வெல்லப் பாசுபதாத்திரம் பெற வேண்டிச் சிவபிரானை நோக்கி
அருந்தவம் புரியா நிற்புழி; பாசுபதாத்திரம் பெற வேண்டிச் சிவபிரானை
நோக்கி அருந்தவம் புரியா நிற்புழி; அவன் தவநிலையைச் சிதைக்குமாறு
துரியோதனன் ஏவிய மூகன் என்னும் அசுரன் பன்றி யுருவெடுத்து
வந்தனனாகச், சிவபிரான் வேட்டுவத் திருவுருக்கொண்டு போந்து
அப்பன்றியைக் கொன்று அருச்சுனனுடன் விளையாட்டாகப் போர் புரிந்து
அவனது வில்லின் நாணினை யறுக்க, அவன் நாணற்ற விற்கழுத்தால்