| 
        
	| கோவிட மாட முபரிகை மேடை கோபுர மரங்கெலாம் பரந்து
 தாவிட மயங்கி யுறங்கினார் போலச்
 சாம்பினார் தனிநகர் மாக்கள்.
 |        (இ 
        - ள்.) தீவிடம் உருத்து - அந்தக் கொடிய நஞ்சானது சினந்து திணி இருள் கடுப்ப - செறிந்த இருள் பரவியதைப் போல, திருநகர்
 எங்கணும் - அழகிய நகர் முழுதும், செறிந்த கா இடம் - நெருங்கிய
 சோலைகளும், கூவல் கயந்தலை - கிணறும் குளமும், சதுக்கம் கழகம்
 ஆவணம் - நாற்றெருக் கூடுமிடமும் கல்விக் கழகமும் கடை வீதியும்,
 அகழ் இஞ்சி - அகழியும் மதிலும், கோ இடம் அரசன் மாளிகையும், மாடம்
 உபரிகை மேடை கோபுரம் அரங்கு - மாடமும் உப்பரிகையும் மேடையும்
 கோபுரமும் நாட்டிய சாலையும், எலாம் பரந்து தாவிட - ஆகிய
 எல்லாவிடங்களிலும் பரந்து தாவுதலால், தனிநகர் மாக்கள் - ஒப்பற்ற அந்
 நகரிலுள்ள மாந்தர்கள், மயங்கி உறங்கினார் போலச் சாம்பினார் - நஞ்சினால் மயங்கி 
        உறங்கினவர்கள் போல வாடினார்கள்.
       விடம் 
        உருத்து இருள் கடுப்ப நகர் முழுதும் எல்லாவிடங்களிலும் பரந்து தாவிட என்க. ஆலாலத்தால் உறங்கிய வானோர் போல
 என்றுரைப்பாருமுளர். (18)
 
        
	| நிலைதளர்ந் துடலந் திமிர்ந்துவேர் வரும்பி நிறைபுலன் பொறிகர ணங்கள்
 தலைதடு மாறி யுரைமொழி குழறித்
 தழுதழுப் படைந்துநா வுணங்கி
 மலைதரு கபமே னிமிர்ந்துணர் வழிந்து
 மயங்கிமூச் சொடுங்கியுள் ளாவி
 அலைதர வூச லாடினார் கிடந்தா
 ரன்னதொன் னகருளா ரெல்லாம்.
 |       (இ 
        - ள்.) நிலைதளர்ந்து உடலம் திமிர்ந்து வேர்வு அரும்பி - நிலை கெட்டு 
        உடல் கம்பித்து வெயர்வை தோன்றி, நிறை புலன் பொறி கரணங்கள் தலை தடுமாறி - நிறைந்த புலன்களும் பொறிகளும் அந்தக் கரணங்களும்
 தலை தடுமாறி, உரைமொழி குழறி தழுதழுப்பு அடைந்து நா உணங்கி -
 உரைக்கின்ற மொழிகள் குழறி நாத் தழுதழுப்புற்றுக் காய்ந்து, மலைதரு கபம்
 மேல் நிமிர்ந்து உணர்வு அழிந்து - பொருகின்ற கபம் மேலோங்கி
 அறிவழிந்து, மயங்கி மூச்சு ஒடுங்கி - மயங்கி உயிர்ப்பு அடங்கி, உள் ஆவி
 அலைதர - உள்ளேயுள்ள உயிர் அலைய, அன்னதொல் நகர் உளார் எல்லாம் ஊசல் ஆடினார் 
        கிடந்தார் - அப் பழைய நகரிலுள்ளாரனைவரும் ஊஞ்சல்
 போல ஆடிக் கிடந்தனர்.
       உடலம், 
        அம் : சாரியை. தலை தடுமாறி - தடுமாற்றமுற்று; ஒரு சொல். உரைமொழி, வினைத்தொகை. ஆடினார் : முற்றெச்சம். (19)
 |