பக்கம் எண் :

வலைவீசின படலம் 169



கூற்றம் போன்றகண் ணுளைச்சியர் குமுதவாய் திறந்து
மாற்றம் போக்கினர் பகர்தருங் கயற்குநேர் மாறாந்
தோற்றம் போக்குவ வவர்விழித் துணைகளக் கயன்மீன்
நாற்றம் போக்குவ தவர்குழ னறுமலர்க் கைதை*

     (இ - ள்.) கூற்றம் போன்ற கண் நுளைச்சியர் - கூற்றுவன் போன்ற
கண்களையுடைய நுளைச்சியர், குமுதவாய் திறந்து மாற்றம் போக்கினர் -
ஆம்பல் மலர் போன்ற வாயினைத் திறந்து கூவி, பகர்தரும் கயற்கு -
விற்கும் கயல் மீனுக்கு, நேர் மாறாம் அவர் விழித்துணைகள் -
நேர்பகையாகிய அவர் இருகண்கள், அக் கயல் மீன் தோற்றம் போக்குவ -
அக் கயல் மீன்களின் தோற்றத்தைப் போக்குவன; அவர் குழல் நறுங்கைதை
மலர் - அவர் கூந்தலிலுள்ள நறியதாழைமலர், நாற்றம் போக்குவது -
அவற்றின் நாற்றத்தைப் போக்கும்.

     மாற்றம் போக்குதல் - விலை கூறுதல். போக்கினர். முற்றெச்சம். (18)

அலர்ந்த வெண்டிரைக் கருங்கழிக் கிடங்கரி னரும்பர்
குலைந்த விழ்ந்துதேன் றுளும்பிய குமுதமே யல்ல
கலந்த ருங்கட லெறிகருங் காற்பனங் கள்வாய்
மலர்ந்த ருந்திய குமுதமு மொய்ப்பன வண்டு.

     (இ - ள்.) அலர்ந்த வெண்திரைக் கருங்கழிக் கிடங்கரின் - பரந்த
வெள்ளிய அலைகளையுடைய கரிய கழியாகிய கிடங்கில், அரும்பர் குலைந்து
அவிழ்ந்து தேன் துளும்பிய குமுதமே அல்ல - முகையின் கட்டவிழ்ந்து
மலர்ந்து தேன் ததும்பிய ஆம்பல் மலரின் மாத்திரமேயல்ல, கலம் தருங்
கடல் எறி - மரக்கலங்களையுடைய கடலின் அலைமோதுகின்ற, கருங்கால்
பனங்கள் - கரிய அடியையுடைய பனை மரத்தின் கள்ளை, வாய் மலர்ந்து
அருந்திய குமுதமும் - வாயைத்திறந்து உண்ட நுளைச்சியரின் வாயாகிய
ஆம்பல் மலரிலும், வண்டு மொய்ப்பன - வண்டுகள் மொய்ப்பன.

     வெண்டிரைக் கருங்கழி என்பது முரண். கிடங்கர், அரும்பர் என்பன
ஈற்றுப்போலி. குமுதம் இரண்டிலும் ஏழனுருபு விரிக்க. பின்னதாகிய குமுதம்
வாய்க்கு ஆகுபெயர். (19)

ஆய பட்டினத் தொருவன்மே லாற்றிய தவத்தாற்
றூய வானவர் தம்மினுந் தூயனாய்ச் சிறிது
தீய தீவினைச் செய்தியாற் றிண்டிமில் வாணர்
மேய சாதியிற் பிறந்துளான் மேம்படு மனையான்.

     (இ - ள்.) ஆயபட்டினத்து ஒருவன் - அந்தப் பட்டினத்தின்கண்
ஒருவன், மேல் ஆற்றிய தவத்தால் - முற்பிறப்பிற் செய்த தவத்தினால், தூய
வானவர் தம்மினும் தூயனாய் - தூய்மையுள்ள தேவர்களினுந


     (பா - ம்.) *நகைமலர்க்கைதை.