|       (இ 
        - ள்.) விடுத்திடும் உயிர்ப்பின் எதிர் - விடுகின்ற மூச்சினெதிரே, 
        அடுத்திடு சரஅசரம் அனைத்தும் - நேர்படுகின்ற இயங்கியற் பொருளும்
 நிலையியற் பொருளுமாகிய எல்லாம், நறை பூளை வீபோல் இரிவு எய்த -
 தேனையுடைய பூளைப்பூப் போலப் பறக்கவும், கடுத்திடு சினக்கனலினுக்கு -
 மிக்கெழுகின்ற கோபத்தீயினுக்கு, உலகம் எல்லாம் மடித்திட தழல் கடவுள்
 வார் புனலை மான - உலகமனைத்தையும் அழிக்கும் தீக் கடவுள் பெருகிய
 நீரினையொப்பதாகவும்.
       சினக்கனலின் 
        வெம்மையை நோக்குழி ஊழித்தீயும் நீர் போலத் தண்ணிதாய்த் தோன்றவென்க. (7)
 
	
	| உடன்றிறைகொள் புள்ளொடு விலங்கலறி யோட மிடைந்தபழு வத்தொடு விலங்கலை மருப்பால்
 இடந்தெறி மருத்தென வெறிந்தளவி லோரைத்
 தொடர்ந்துடல் சிதைத்துயிர் தொலைத்திடியி னார்த்தே.
 |       (இ 
        - ள்.) இறைகொள் புள்ளொடு - தங்கிய பறவைகளோடு, விலங்கு அலறி ஓட - மிருகங்களும் அலறி ஓடுமாறு, மிடைந்த பழுவத்தொடு
 விலங்கலை - நெருங்கிய வனங்களோடு மலைகளையும், உடன்று மருப்பால்
 இடந்து - வெகுண்டு கொம்பினால் அடியொடு பெயர்த்து, எறி மருத்து என
 எறிந்து - வீசுகின்ற காற்றைப் போல எறிந்து, அளவிலோரைத் தொடர்ந்து
 உடல் சிதைத்து உயிர் தொலைத்து - அளவிறந்த மக்களைப் பின் தொடர்ந்து
 அவர்கள் உடலைச் சேதித்து உயிரைத் தொலைத்து, இடியின் ஆர்த்து -
 இடிபோல பேரொலி செய்து.
       இறைகொள் 
        - வனங்களிலும் மலைகளிலும் தங்குதலைக் கொண்ட. உடன்று இடந்து எறிந்து எனக் கூட்டுக. (8)
 
	
	| மறலிவரு மாறென மறப்பசு வழிக்கொண் டறலிவர் தடம்பொருனை யாறுடைய மாறன்
 திறலிமலர் மங்கையுறை தென்மதுரை முன்னா
 விறலிவரு கின்றதது மீனவ னறிந்தான்.
 |       (இ 
        - ள்.) மறலி வருமாறு என மறப்பசு வழிக் கொண்டு - கூற்றுவன் வருந்தன்மை போலக் கொலைத் தொழிலையுடைய பசுவானது வழி நடந்து,
 அறல் இவர் தடம் பொருளை ஆறு உடைய மாறன் - கருமணல் பரந்த
 பெரிய பொருனை யாற்றினையுடைய பாண்டியனது, திறலி மலர் மங்கை
 உறை தென்மதுரை முன்னா - வீரமகளும் திருமகளும் உறைகின்ற
 தென்றிசைக்கணுள்ள மதுரையை நோக்கி, விறலி வருகின்றது - வெற்றி
 கொண்டு வாராநின்றது; அது மீனவன் அறிந்தான் - அதனைப் பாண்டியன்
 அறிந்தான்.
       திறலி 
        - திறல் உடையவன்; கொற்றவை; இ : பெயர் விகுதி. விறலி - விறல் கொண்டு. "மாடமலி" என்பது முதலிய செய்யுட்களிலுள்ள எச்சங்களை
 'வருகின்றது' என்பதனோடு முடிக்க. (9)
 
      (பா 
        - ம்.) * திறலி மரைமங்கை.   |