|  
             (இ 
        - ள்) மருள் கெட - மயக்கம் நீங்க, மூழ்கினோர் - (இதில்)  
        நீராடியவர்கள், நல்மங்கலம் பெறலால் - நல்ல நன்மைகளை அடைவதால்,  
        நாமம் அருள் சிவ தீர்த்தம் ஆகும் - பெயர் அருளையுடைய சிவ  
        தீர்த்தமாகும்; புல்நெறி அகற்றி - தீயவழிகளிற் செல்லுதலை நீக்கி,  
        உள்ளத்து இருள்கெட - மனத்தின்கண் அஞ்ஞான இருள் கெடுமாறு,  
        ஞானம் தன்னை - ஞானவொளியை, ஈதலான் ஞான தீர்த்தம் -  
        கொடுதலினால் ஞான தீர்த்தம் என்றும், தெருள் கதி தரலால் - தெளிந்த  
        முத்தியை நல்குவதால், முத்தி தீர்த்தம் என்று - முத்தி தீர்த்தம் என்றும்,  
        இதற்கு நாமம் - இதற்குப் பெயர்களுள்ளன எ - று. 
            சிவம் 
        என்பது மங்கலம் என்னும் பொருளதாகலின் மங்கலந்  
        தருவதற்குச் சிவ தீர்த்த மென்று பெயர். சிவம், மங்கலம், நலம் என்பன  
        ஒரு பொருளன. சீவகசிந்தாமணியுரையில் 'சிவம்புரி 
        நெறியைச் சேர'  
        என்பதற்கு 'நன்மை புரிந்த வீட்டைச் சேரும்படி' என நச்சினார்க்கினியர் 
         
        பொருள் கூறியிருப்பதுங் காண். தெருள் - ஞானம்; 'தெருளாதான்  
        மெய்ப்பொருள் கண்டற்றால்' என்பதற்குப் பரிமேலழகர் 
        கூறிய உரையை  
        நோக்குக. ஞானத்தையும், ஞானத்தானெய்தும் கதியையும் தரும்  
        என்றார். (12)  
      
      
         
          குடைந்துதர்ப் 
            பணமுஞ் செய்து 
                 தானமுங் கொடுத்தும் மாடே* 
            அடைந்தெழுத் தைந்து மெண்ணி 
                 யுச்சரித் தன்பா லெம்மைத் 
            தொடர்ந்துவந் திறைஞ்சிச் சூழ்ந்து 
                 துதித்தெமை யுவப்பச் செய்தோர் 
            உடம்பெடுத் ததனா லெந்த 
                 வுறுதியுண் டதனைச் சேர்வார். | 
         
       
       
           (இ 
        - ள்.) குடைந்து - நீராடி, தர்ப்பணமும் செய்து தானமும்  
        கொடுத்து - தர்ப்பணம் செய்து தானங் கொடுத்து, அம்மாடே அடைந்து -  
        அதனருகே தங்கி, ஐந்து எழுத்தும் எண்ணி உச்சரித்து - திருவைந்  
        தெழுத்துக்களையும் கருதி உச்சரித்து, அன்பால் - அன்பினாலே, எம்மைத்  
        தொடர்ந்து வந்து இறைஞ்சி - எம்மைப் பற்றி வந்து வணங்கி, சூழ்ந்து -  
        வலங்கொண்டு, துதித்து எமை உவப்பச் செய்தோர் - துதித்து எம்மை  
        மகிழ்வித்தவர்கள், உடம்பு எடுத்ததனால் - மக்கட்பிறப்பை யடைந்ததனால்,  
        எந்த உறுதி உண்டு - எந்தப் பயன் அடைதற்கு உரியதோ, அதனைச்  
        சேர்வார் - அதை அடைவார்கள் எ - று. 
            தர்ப்பணஞ் 
        செய்தல் - மந்திரநீ ரிறைத்தல். எண்ணி - கணித்து  
        என்றுமாம்; 'அக்குமாலைகொ டங்கையி னெண்ணுவார்' என்னும் தமிழ் 
         
        மறையுங் காண்க. விளக்கத்தினைக் காட்ட 'எந்த' என்றார். உறுதி -  
        வீடுபேறு. (13)  
      
         
           இந்தநீ 
            ரெம்மை யாட்டி னேழிரண் டுலகின் மிக்க 
            அந்தமி றீர்த்த மெல்லா மாட்டிய பயன்வந் தெய்தும் 
            வந்ததின் மூழ்கி யிங்கு வைகுநங் குறியை யுங்கள் 
            சிந்தையி லார்வம் பொங்கப் பூசனை செய்மி னென்னா. | 
         
       
       
       
       
           (பா 
      - ம்.) * கொடுத்துமாடே.  
   |