வளையெறி தரங்க ஞான வாவியை நோக்கிற் பாவத் 
			தளையறு மூழ்கின் வேண்டுங் காமிய மெல்லாஞ் சாரும் 
			உளமுற மூழ்கு மெல்லை முழுக்கொன்றற் குலகத் துள்ள 
			அளவறு தீர்த்த மெல்லா மாடிய பயன்வந் தெய்தும். | 
	 
	 
	
		
       
           (இ 
        - ள்.) வளை எறி தரங்கம் - சங்குகளை வீசுகின்ற அலைகளை  
        யுடைய, ஞான வாவியை - ஞான தீர்த்தத்தை, நோக்கில் - தரிசித்தால்,  
        பாவத் தளை அறும் - பாவத்தொடங்கு நீங்கும்; மூழ்கின் - மூழ்கினால்,  
        வேண்டும் காமியம் எல்லாம் சாரும் - விரும்புகின்ற பொருள்களனைத்தும்  
        வந்து கூடும்; உளம் உற மூழ்கும் எல்லை - மனம் பொருந்த மூழ்குங்கால்,  
        முழுக்கு ஒன்றற்கு - ஒவ்வொரு முழுக்கிற்கும், உலகத்து உள்ள -  
        உலகங்களிலுள்ள, அளவு அறு தீர்த்தம் எல்லாம் - அளவிறந்த தீர்த்தங்கள்  
        எல்லாவற்றினும், ஆடிய பயன் வந்து எய்தும் - ஆடியதனால் வரும் பயன்  
        வந்து பொருந்தும் எ - று. 
            காமியம் 
        - விரும்பிய பொருள். மூழ்கு மெல்லை - மூழ்குமிடத்து.  
        தீர்த்தமெல்லாவற்றிலும் என்க. (17)  
      
      
        
	மெய்யைமண் ணாதி கொண்டு விதிவழி சுத்தி செய்து 
			மையறு வருண சூத்த* மந்திர நவின்று மூழ்கில் 
			துய்யமா தீர்த்த மெல்லாந் தோய்ந்துநான் மறையு மாய்ந்தோர் 
			கையிலெப் பொருளு மீந்த காசறு பேறு நல்கும். | 
	 
	 
	
	
		
       
           (இ 
        - ள்.) மெய்யை மண் ஆதி கொண்டு - உடலைமண்  
        முதலியவைகளைக் கொண்டு, விதிவழி - விதிப்படி, சுத்தி செய்து -  
        தூயதாக்கி, மை அறு - குற்றமற்ற, வருண சூத்த மந்திரம் நவின்று மூழ்கில்  
        - வருண சூக்க மந்திரத்தை உச்சரித்து நீராடில் (அது), துய்ய மா தீர்த்தம்  
        எல்லாம் தோய்ந்து - புனிதமான பெருமைபொருந்தியய தீர்த்தங்கள்  
        எல்லாவற்றினும் மூழ்கி, நான்மறையும் ஆய்ந்தோர் கையில் - நான்கு  
        வேதங்களையும் ஆராய்ந்துணர்ந்த மறையவர் கையில், எப்பொருளும் ஈந்த  
        - (அவர்கள் விரும்பிய) பொருள் அனைத்தையும் தானஞ்செய்தலால் வரும்,  
        காசு அறு பேறு நல்கும் - குற்றமற்ற பயை நல்கும் எ - று. 
            மண்ணாதியாவன 
        :- ஒன்பது வகை மண்ணும், எழுவகைத் தளிரும்,  
        பஞ்ச கவ்வியமும் ஆம்; இதனை,  
       
      
         
           "அரசு கூவிளந் துழாய்புளி யால்சம்பு 
            மூலம் 
            புரசை மால்கரிக் கூடமும் புரவிமந் திரமும் 
            கரிசி லானிரைத் தொழுவழுங் கல்விநூல் விதியின் 
            வரிசை யாலெடுத் திடப்படு மண்களொன் பதுமே" | 
         
       
       
      
         
           "தளிர் துழாய்புளி சம்புகூ விளம்வட 
            மரசு 
            விளரி லாவறு கென்பன விளம்புகவ் வியங்கள் 
            அளவில் சீர்தரு மந்நல மறிகபால் தயிர்நெய் 
            வளநி லாவிய கோசல மயமிவை யாகும்" | 
         
       
       
       
       
           (பா 
      - ம்.) * சூக்கம்.  
   |