|
வேறு
என்பது ஏனை யென இடைச்சொற் பொருட்டாய் நின்றது.
உள்ளமும் மதியும் முதலியவற்றின் என்க; மதி - அந்தக்கரணத்து ளொன்றாய
புத்தி; மதியின் பேதம் - போத விகற்பம் எனினுமாம். இவையன்றி நின்ற
பிறிதல்ல என்பதற்கு, இவையல்லாத வேறு பொருளும் அல்ல என்றும்,
இவற்றை விடுத்து வேறாக நின்ற தல்ல என்றும் பொருள் கூறலுமாம்;
| ஒன்று நீயல்லை
யன்றி யொன்றில்லை |
என்னும் திருவாசகம்
இங்கே சிந்திக்கற்பாலது. இந்நூலாசிரியர்,
அவையடக்கத்தில்,
அல்லையீ தல்லை
யீதென மறைகளு மன்மைச்
சொல்லினாற் றுதித் திளைக்குமிச் சுந்தரன் |
என்று கூறியதும் இச்செய்யுளும்
கருத்தொருமையுடையவாதல் காண்க.
பூதங்களும் அதுவல்ல என்றிங்ஙனம் விரித்துக்கொள்க. பிறிதல்ல என்புழிப்
பன்மையொருமை மயக்கம். அல்ல என்பன பன்மை குறியாது நின்றன
வென்னலுமாம். வேதங்களாலும் அறிய வொண்ணாது கரந்திருத்தலின்
வஞ்சவெளி என்றார்; மாணிக்க வாசகப்பெருமான் ஒளிர்குஞ்சோரன்
எனத் திருவாய்மலர்ந்தருளியதுங் காண்க. இறைவன் இங்ஙனம் மறைகளாலும்
அறிதற்கரியனாயினும் அடியார்க்கு மிக எளியனாவன் என்பதனை
விளக்குவார் கூடல், மறுகிற் பாதங்கணோவ வளையிந்தனாதி பகர்வார்
என்றார், எத்தனையும் அரிய நீ எளியையானாய் என்றார்
திருநாவுக்கரசரும்; இது கூடற் காண்ட மாதலும்,
இக்காண்டத்து
முதற்படலம் கூடலாயின வரலாறுணர்த்தலும் கருதிக் கூடல் எனப் பெயர்
கூறினார். பாதங்கள் நோவ என்றது ஆராமை மேலிட்டுக் கூறியவாறு. நடந்து
என்பது சொல்லெச்சம். ஆதி என்றமையால் மாணிக்கமும் பரியும் விற்றல்
கொள்க. இந்தனாதி, வடமொழி : நெடிற்சந்தி. ஆயுமவர் வெளியென்ப என முடிக்க. (1)
சிற்சத்தி
[அறுசீரடியாசிரிய
விருத்தம்]
|
| திருமகள்
வலக்கண் வாக்கின் சேயிழை யிடக்கண் ஞானப் பெருமக ணுதற்க ணாகப் பெற்றுவான்
செல்வங் கல்வி அருமைவீ டளிப்பாள் யாவ ளவளுயிர்த் துணைவன் காண ஒருமுலை மறைந்து
நாணி யொசிந்தபூங் கொம்பி னின்றாள். |
(இ - ள்.) திருமகள் வலக்கண் - பூமகளை
வலக்கண்ணும், வாக்கின்
சேயிழை இடக்கண் - நாமகளை இடக்கண்ணும், ஞானப்பெருமகள் நுதல்
கண் ஆகப் பெற்று - ஞானக்கோமகளை நெற்றிக் கண்ணுமாகப் பெற்று,
வான் செல்வம் கல்வி அருமை வீடு அளிப்பான் யாவள் - சிறந்த
செல்வத்தையும் கல்வியையும் எய்துதற்கரிய வீடுபேற்றையும் அருள்பவள்
யாவள், அவள் - அம்முதல்வியே, உயிர்த்துணைவன் காண - தன்
உயிர்த்துணைவன் கண்டவளவில், ஒரு முலை மறைந்து - ஒரு கொங்கை
மறையப்பெற்று, நாணி - நாணுற்று, ஒசிந்த பூங்கொம் பின் நின்றாள் -
துவண்ட பூங்கொம்புபோல நின்றாளாவள்.
|