நீடுபல காலங்க ணித்தரா யிருந்தும்
நின்மலஞா னத்தையில்லார்
நிகழ்ந்திடுவர் பிறப்பில்
ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே
யிடைக்கே யெறிவிழியின்
படுகடைக்கே கிடந்துமிறை ஞானம்
கூடுமவர் கூடரிய
வீடுங் கூடிக் குஞ்சித்த சேவடியுங்
கும்பிட்டே யிருப்பர்ழு |
என்னும் சிவஞான
சித்தியாரால் அறிக. (17)
இன்ன செய்கையி னொழுகுவா ரொருபொழு தேகித்
தென்னர் தம்பிரா னவையிடைச் சென்றெதிர் நின்றார்
அன்ன போதடு பரிநிறை காப்பவ ரரசன்
முன்னர் வந்துதாழ்ந் தொருசிறை நின்றிது மொழிவார். |
(இ
- ள்.) இன்ன செய்கையின் ஒழுகுவார் - இச்செய்கையுடன் ஒழுகு
வாராகிய வாதவூரர், ஒரு பொழுது ஏகி - ஒரு நாட்சென்று, தென்னர்
தம்பிரான் அவையிடைச் சென்று எதிர் நின்றார் - பாண்டியர் தலைவனாகிய
அரிமருத்தனனது அவையினைக் குறுகி அவனெதிரே நின்றனர்; அன்னபோது
- அப்பொழுது, அடுபரிநிரை காப்பவர் - பகைவரைக் கொல்லும்
குதிரைப்பந்தியினைக்காப்பவர், அரசன் முன்னர் வந்து தாழ்ந்து - அவ்வரசன்
முன் வந்து வணங்கி, ஒரு சிறை நின்று இது மொழிவார் - ஒரு புறத்தில்
ஒதுங்கி நின்று இதனை மொழிவாராயினர்.
இன்ன,
அன்ன என்பன சுட்டுத்திரிபுகள். (18)
மறந்த வாதவேல் வலவநம் வயப்பரி வெள்ளத்
திறந்த வாம்பரி போகநின் றெஞ்சிய வெல்லாம்
நிறைந்த நோயவு நெடிதுமூப் புடையவு மன்றிச்
சிறந்த வாம்பரி யொன்றிலை தேர்ந்திடி னென்றார். |
(இ
- ள்.) மறம்தவாத வேல்வலவ - வெற்றி நீங்காத வேற்படை
ஏந்திய வீர, நம் வயப்பரி வெள்ளத்து - நமதுவெற்றி பொருந்திய குதிரை
வெள்ளத்தில், இறந்தவாம்பரி போக - இறந்தொழிந்தவாகிய குதிரைகள்
போக, நின்று எஞ்சிய எல்லாம் - எஞ்சி நின்ற குதிரைகள் அனைத்தும்,
நிறைந்த நோயவும் - நிறைந்த நோயினையுடையவும், நெடிது மூப்பு
உடையவும் அன்றி - கழிந்த மூப்பினை யுடையனவுமே அல்லாமல்,
தேர்ந்திடின் சிறந்த வாம்பரி ஒன்று இலை என்றார் - ஆராய்ந்து
பார்க்குமிடத்துச் சிறந்த தாவுங் குதிரை ஒன்றேனும் இல்லை என்று கூறினர்.
உரிமைபற்றி
நம் என்றார். அளவிறந்த குதிரை யென்பார்
பரிவெள்ளத்து என்றனர். வாம், வாவும் என்னும் பெயரெச்சத்து உயிர்மெய்
கெட்டது. (19)
மன்றல் வேம்பனும் வாதவூர் வள்ளலை நோக்கி
இன்று நீர்நம தறைதிறந் திருநிதி யெடுத்துச் |
|