|
செங்கோன்மை உடையாய்
- புவியை மறத்தினைக்கு கடிந்து கோடுதலின்றிப்
புரக்கும் செங்கோலை உடையாய், உனக்கு ஒரு குறை உளது - நின்பால்
ஒரு குறை உண்டு; உன் வீடாவளம் சேர் நாட்டு - அதனால் உனது அழியாத
வளம் பொருந்திய நாட்டின்கண், இந்நாள் வேள்விச் செல்வம் அருகியது -
இப்பொழுது வேள்வியாகிய செல்வம் குறைந்தது.
வரை
- உத்தம விலக்கணமாகிய கீற்றுமாம். அன்புடைமை கெடாத
விரதம் என்றுமாம். நீ இத்தன்மையை ஆயினும் நின்பால் ஓர் குறையுளது
அதனால் அருகியது என விரித்துரைக்க. வாடா வீடா, என்னும் ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சங்கள் ஒரு பொருள் குறித்தன. ஆல் : அசை. (8)
மறையே நமது பீடிகையா மறையே நமது பாதுகையாம்
மறையே நமது வாகனமா மறையே நமது நூபுரமாம்.
மறையே நமது கோவணமா மறைநேமது விழியாகும்
மறையே நமது மொழியாகு மறையே நமது வடிவாகும். |
(இ
- ள்.) மறையே நமது பீடிகை ஆம் - வேதமே நமது ஆதன
மாகும்; மறையே நமது பாதுகை ஆம் - வேதமே நமது பாதுகையாகும்;
மறையே நமது வாகனம் ஆம் - வேதமே நமது ஊர்தியாகும்; மறையே
நமது நூபுரம் ஆம் - வேதமே நமது காற்சிலம்பாகும்; மறையே நமது
கோவணம் ஆம் - வேதமே நமது கோவணமாகும்; மறையே நமது விழி
ஆகும். வேதமே நமது கண்ணாகும்; மறையே நமது மொழி ஆகும் -
வேதமே நமது மொழியாகும்; மறையே நமது வடிவு ஆகும் - வேதமே
நமது திருவுருவமாகும். (9)
வேதந் தானே
நமதாணைச் சத்தி வடிவாய் விதிவிலக்காய்ப்
போதங் கொளுத்தி நிலைநிறுத்திப் போகங் கொடுத்துப்பல்லுயிர்க்கும்
பேதஞ் செய்யும் பிணியவிழ்த்தெம் பிரியா வீடு தருவதுதேன்
நாதஞ் செய்யுந் தார்வேந்தே நமது செங்கோ லதுவாகும். |
(இ
- ள்.) வேதம் தானே நமது ஆணைச்சத்தி வடிவாய் - வேதமே
நமது ஆணையாகிய சத்தி வடிவாகியும், விதிவிலக்காய் - விதி
விலக்குகளாகியும், போதம் கொளுத்தி நிலை நிறுத்தி - அறிவு கொளுத்தி
நன்னெறியில் நிறுத்தி, போகம் கொடுத்து - போகத்தை அளித்து, போம்
செய்யும் பிணி அவிழ்த்து - திரிபினை விளைக்கும் ஆணவ மலக்கட்டினை
அவிழ்த்து, பல் உயிர்க்கும் - ஆன்ம கோடிகளுக்கெல்லாம், எம்பிரியா வீடு
தருவது - எமது பிரியாத வீடுபேற்றை அருளுவதாகும்; தேன் நாதம் செய்யும்
தார் வேந்தே - வண்டுகள் ஒலிக்கும் மாலையையணிந்த மன்னனே, அது
நமதுசெங்கோல் ஆகும் - அவ்வேதமே நமது செங்கோலுமாகும்.
போகம்
- இம்மை மறுமையின்பங்கள். பேதஞ்செய்யும் அறிவை
வேறுபடுத்தும். எம்மைப் பிரியாதிருத்தலாகிய எமது வீடு என்க. (10)
|