| 
	
	| அழலவிர்ந் தனைய செங்கே ழடுக்கிதழ் முளரி வாழ்க்கைத் தொழுதகு செம்ம றன்னைத் தொழுதுமீண் டகன்று நீங்கா
 விழைதகு* காதல்கூர விச்சுவ வுருவன் றன்னை
 வழிபடு குருவாக் கொண்டான் மலர்மகன் சூழ்ச்சி தேறான்.
 |       (இ 
        - ள்.) அழல் அவிர்ந்து அனைய செங்கேழ் - தீயானது ஒளி விட்டா லொத்த செந்நிறத்தையுடைய, அடுக்கு இதழ் முளரி - அடுக்கிய
 இதழகளையுடைய தாமரை மலரில், வாழ்க்கை - வாழ்தலையுடைய
 தொழுதகு செம்மல் தன்னை - வணங்கத் தக்க பெருமையுடைய பிரமனை,
 மீண்டு தொழுது அகன்று நீங்கா - மீளவும் வணங்கி (அவணின்றும்)
 நீங்கிப்போய், மலர் மகன் சூழ்ச்சி தேறான் - பிரமனது உபாயத்தை
 அறியாதவனாய், விழைதகு காதல் கூர - விரும்பித் தக்க அன்பு மிக,
 விச்சுவ உருவன் தன்னை - விச்சுவ வுருவனை, வழிபடு குருவாக்
 கொண்டான் - தான் வழிபடும் குரவனாகக் கொண்டான் எ - று.
       அவிர்ந்தா 
        லனைய என்பது விகாரமாயிற்று. தொழுதல் தகு விழைதல் தகு. கூர - மிக; கூர் : உரிச்சொல். (9)
 
        
	| கைதவக் குரவன் மாயங் கருதிலன் வேள்வி யொன்று செய்திட லடிக ளென்னத் தேவர்கட் காக்கங் கூறி
 வெய்தழல் வளர்ப்பா னுள்ளம் வேறுபட் டவுணர்க் கெல்லாம்
 உய்திற நினைந்து வேட்டான் றனக்குமே லுறுவ தோரான்.
 |       (இ 
        - ள்.) கைதவக் குரவன் மாயம் கருதிலன் - வஞ்சனையை யுடைய குரவனது தீய கருத்தை உணராதவனாய், அடிகள் வேள்வி ஒன்று
 செய்திடல் என்ன - அடிகளே ஒரு வேள்வி செய்க என்று வேண்ட,
 தேவர்கட்கு ஆக்கங் கூறி - தேவர்களுக்கு நலன் உண்டாக எனச்
 சொல்லி, வெய்து அழல் வளர்ப்பான் - வெம்மையாகிய தீயை
 வளர்க்கின்றவன், தனக்கு மேல் உறுவது ஓரான் - தனக்குமேல் விளைவதை
 உணராதவனாய், உள்ளம் வேறுபட்டு - மனம் வேறுபட்டு, அவுணர்க்கு
 எல்லாம் உய்திறம் நினைந்து வேட்டான் - அசுரர்களுக்கெல்லாம் ஆக்கங்
 கருதி வேள்வி செய்தான் எ-று.
      செய்திடல் 
        : அல்லீற்று வியங்கோள்; மக்கட் பதடியெனல் என்புழிப் போல. அடிகள், குரவர் முதலாயினாரை விளித்தற்குரிய உயர்வுப் பன்மைச்
 சொல். ஆக்கமுண்டாகவென - உய்திற முண்டாதலை. (10)
 
        
	| வாக்கினான் மனத்தால் வேறாய் மகஞ்செய்வான் செயலை யாக்கை நோக்கினா னோதி தன்னா னோக்கினான் குலிச வேலால்
 தாக்கினான் றலைகண் மூன்றுந் தனித்தனி பறவை யாகப்
 போக்கினா னலகை வாயிற் புகட்டினான் புலவுச் சோரி.
 |       (இ 
        - ள்.) வாக்கினால் மனத்தால் வேறாய் - சொல்லால் வேறாகவும் நினைப்பால் வேறாகவும், மகம் செய்வான் செயலை - வேள்வி
 செய்கின்றவன் செய்கையை, ஆக்கை நோக்கினான் - உடலிற் கண்களை
 யுடைய இந்திரனானவன், ஓதி தன்னால் நோக்கினான் - ஞானப்
 
       (பா 
        - ம்.) * விழைதரு.   |