|       வேறெங்குஞ் 
        செல்லாது வணிக மறுகில் வருதலின் அவர்க்கே யிடுவே மெனும் உட்கோளினர் போல் என்றார். வளையை உட்கோனினர் போற்
 சுமந்து என்றும் தார்போலச் சுமந்து என்னும் தனித்தனிகூட்டுக. பட்டுக்
 கயிற்றிலே பல நிற வளைகள் கோத்திருப்பது ஐவண்ணத் துணர்த்தார்
 போன்றது. அதனைச் சுமத்தற்கண் உள்ள விருப்பம் புலப்பட தொண்டர்
 தொடுத்த தார்போல் என்றார். (20)
 
         
          | மன்னு மறையின் 
            பொருளுரைத்த மணிவாய் திறந்து வளைகொண்மின்
 என்னு மளவிற் பருவமுகி லிமிழின் னிசைகேட டெழுமயில்போற்
 றுன்னு மணிமே கலைமிழற்றத் தூய வணிக குலமகளிர்
 மின்னு மணிமா ளிகைநின்றும் வீதி வாயிற் புறப்பட்டார்.
 |       (இ 
        - ள்.) மன்னும் மறையின் பொருள் உரைத்த மணிவாய் திறந்து - நிலைபெற்ற வேதத்தின் பொருளை அருளிச் செய்த அழகிய திருவாயைத்
 திறந்து, வளைகொண்மின் என்னும் அளவில் - வளையல் கொள்ளுங்கள்
 என்று கூறிய வளவில், பருவம் முகில் இமிழ் இன் இசை கேட்டு எழு
 மயில்போல் - கார் காலத்துச் சூற்கொண்ட மேகம் ஒலிக்கும் இனிய
 ஒலியினைக் கேட்டு (ஆடுதற்கு) எழும் மயில்போல, துன்னும் மணிமேகலை
 மிழற்ற - நெருங்கிய மணிகளையுடைய மேகலை ஒலிக்க, தூய வணிககுல
 மகளிர் - களங்க மில்லாத வணிககுல மகளிர், மின்னும் மணி மாளிகை
 நின்றும் - ஒளி விடுகின்ற மணிக ளழுத்திய மாளிகையி னின்றும், வீதி
 வாயில்புறப்பட்டார் - வீதியின்கண் புறப்பட்டனர்.
       முனிபுங்கவர்களாலும் 
        உணர்தற்கரிய மறைப்பொருளை அவர்கட்கு உணர்த்தியருளிய திருவாயால் அறிவு சிறிது மில்லாரும் கூறிவிற்கும்
 மொழிகளைக் கூறுவானாயிற்று, அவனது அருள் இருந்தவாறென்னே என
 வியந்துரைத்தவாறு. வளைவாங்குவாருளரோ எனக் கூவி விற்குமளவில் என்க.
 மயில் சாயலால் மகளிர்க்கு உவமம், ஈண்டு உவகை மிகுதியைக் குறிக்க
 முகிலிசை கேட்டெழும் மயிலைக் கூறினார். மாளிகை நின்றும்
 என்பதற்கியையமலையினின்றெழும் மயில் போல் என விரித்துரைத்தலும்
 பொருந்தும். வாய் - இடம். (21)
 
        
	| வளைக ளிடுவா ரெனத்தங்கண் மனமெல் லாந்தம் புடையொதுங்கத் தளைக ளிடுவார் வருகின்றார் தம்மைக் கொம்மை வெம்முலையார்
 துளைக ளிடுதீங் குழலிசைபோற் சுரும்பு பாடக் கருங்குழன்மேல்
 விளைக ளொழுக நுடங்கிவரு மின்போ லடைந்து கண்டார்கள்.
 |       (இ 
        - ள்.) வளைகள் இடுவார் என - கைக்கு வளையல் இடுவார் போன்று, தங்கள் மனம் எல்லாம் தம்புடை ஒதுங்க - தங்கள் மனம் முழுதும்
 தம்மிடம் ஒதுங்குமாறு, தளைகள் இடுவார் வருகின்றார் தம்மை - (அவற்றை)
 விலங்கிடுதற்கு வருகின்ற அவ்வணிகரை, கொம்மை வெம்முலையார் -
 திரட்சியுடைய விருப்பந்தரும் கொங்கையையுடைய அம்மகளிர், துளைகள்
 இடு தீங்குழல் இசைபோல் சுரும்பு பாட - துளைகளிட்ட இனிய
 வேய்ங்குழலின் இசைபோல வண்டுகள் பாடவும், கருங்குழல்மேல் விளைகள்
 |