|  அன்பர்களின் பெரிய 
        சுமை யனைத்தையும், தாங்குவார் அவரே அன்றோ - தாங்குவார் அவரே அல்லவா.
       சயிலம், 
        சைலம் என்பதன் போலி. சொல் நெடுந்தாள் - சொல்வரம் பிறந்த பாதம் என்றுமாம்;
 
	
	| "பாதாள மேழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்" |  என்னும் திருவாசகமும் 
        காண்க. இது வேற்றுப்பொருள் வைப்பணியின் பாற்படும். (8)
 
	
	| சிலையது பொறைதோற் றாது சிவனடி நிழலி னின்றார் நிலையது நோக்கி மாய நெறியிது போலு மென்னாக்
 கொலையது வஞ்சா வஞ்சர் கொடுஞ்சினந் திருகி வேதத்
 தலையது தெரிந்தார் கையுந் தாள்களுங் கிட்டி யார்த்தார்.
 |       (இ 
        - ள்.) சிலையது பொறை தோற்றாது - கல்லின்பாரம் தோன்றாமல், சிவன் அடி நிழலில் நின்றார் நிலையது நோக்கி -
 சிவபெருமான் திருவடி நிழலின் கண் நின்ற அடிகளின் தன்மையைப்
 பார்த்து, இது மாயநெறி போலும் என்னா - இது ஓர் மாய வழிபோலும்
 என்று கருதி, கொலையது அஞ்சாவஞ்சர் - கொலையினைச்சிறிது மஞ்சாத
 வஞ்சத்தறுகணாளர், கொடுஞ்சினம் திருகி - கொடிய சினம் முறுகி,
 வேதத்தலையது தெரிந்தார் - மறையின் முடியினை அறிந்த அடிகளின்,
 கையும் தாள்களும் கிட்டி ஆர்த்தார் - கைகளிலும் கால்களிலும் கிட்டி
 கட்டினார்.
       சிலையது, 
        அது ஆறனுருபு. நிலையது முதலிய மூன்றிலும் அது பகுதிப் பொருள் விகுதி. (9)
 
	
	| அக்கொடுந் தொழிலு மஞ்சா திருந்தன ரரனை யுள்கி இக்கொடுந் தொழிலி னார்தா மினிநனி யொறுப்ப ரென்னாப்
 புக்கது காண்டற் குள்ளம் பொறானென விரவிப் புத்தேள்
 மிக்கதன் னொளிகண் மாழ்கி விரிகட லழுவத் தாழ்ந்தான்.
 |       (இ 
        - ள்.) அக்கொடுந் தொழிலும் அஞ்சாது - அந்தக்கொடிய செய்கைக்கும் அஞ்சாமல், அரனை உள்கி இருந்தனர் - இறைவனை
 நினைந்து (துன்பின்றி) இருந்தனர்; இக்கொடுந் தொழிலினார் தாம் -
 இந்தக்கொடிய தண்டலாளர், இனி நனி ஒறுப்பர் என்னா - இனி மிகவுந்
 தண்டிப்பர் என்று கருதி, அதுகாண்டற்கு உள்ளம் பொறான் என -
 அதனைப் பார்த்தற்கு உள்ளம் பொறுக்கலாற்றாதவனைப் போல,
 இரவிப்புத்தேள் - சூரியதேவன், மிக்க தன் ஒளிகள் மாழ்கி - தன்னுடைய
 மிகுந்த கிரணங்கள் கெட்டு, விரிகடல் அழுவத்துப்புக்கு ஆழ்ந்தான் -
 விரிந்த கடற் பரப்பின்கட் சென்று அழுந்தினன்.
       தாம், 
        அசை. இயல்பாக அத்தமித்த சூரியனை அது காண்டற்கு உள்ளம் பொறானென ஆழ்ந்தான் என்றமையால் இது தற்குறிப்பேற்றவணி.
 (10)
 |