|       (இ 
        - ள்.) எண்ணிய எண்ணியாங்கே யான் பெற முடித்தாய் போற்றி - எண்ணியவற்றை எண்ணியவண்ணமே யான் பெறுமாறு முடித்தவனே
 வணக்கம்; பண் இயல் மறைகள் தேறா - பண் அமைந்த மறைகளால்
 அறியப்படாத, பால் மொழி மணாள போற்றி - பால்போலும் இனிய
 மொழிகளையுடைய அங்கயற்கணம்மையின் தலைவனே வணக்கம்; புண்ணியர்
 தமக்கு வேதப் பொருள் உரை பொருளே போற்றி - கண்ணுவர் முதலிய
 முனிவர்கட்கு வேதத்தின் பொருளை அருளிச்செய்த மெய்ப்பொருளே
 வணக்கம்; விண்இழி விமானம் மேய சுந்தர விடங்க போற்றி - வானினின்றும்
 இறங்கிய விமானத்தின்கண் எழுந்தருளிய சோமசுந்தரரென்னும்
 பேரழகுடையவனே வணக்கம்.
 
        
          | எண்ணிய வெண்ணியாங் 
            கெய்துப |  என்னும் திருக்குறட்டொடர் 
        இங்கே கருதற்பாலது. தேறா மணாள என்க. பான்மொழி. அன்மொழித்தொகை. உரை பொருள் - உரைத்த மெய்ப்பொருள் :
 வினைத்தொகை. (15)
 
	
	| எவ்விட லெடுத்தேன் மேனா ளெண்ணிலாப் பிறவி தோறும் அவ்வுட லெல்லாம் பாவ மறம்பொருட் டாக வன்றோ
 தெவ்வுடல் பொடித்தா யுன்றன் சேவடிக் கடிமை பூண்ட
 இவ்வுட லொன்றே யன்றோ வெனக்குட லான தையா.
 |       (இ 
        - ள்.) மேல்நாள் எண் இலாப் பிறவிதோறும் - முன்னாளில் எண்ணிறந்த பிறவிகள்தோறும், எவ்வுடல் எடுத்தேன் - எவ்வெவ்வுடல்கள்
 எடுத்தேனோ, அவ்வுடல் எல்லாம் - அவ்வுடல்களனைத்தும், பாவம் அறம்
 பொருட்டாக அன்றோ - தீவினையும் நல்வினையுமாகிய அவ்விரண்டின்
 பொருட்டாக அல்லவா, தெவ் உடல் பொடித்தாய் - பகைவனாகிய
 மதவெளின் உடலைநீறாக்கியவனே, உன்றன் சேவடிக்கு அடிமைபூண்ட
 இவ்வுடல் ஒன்றே அன்றோ - உனது சிவந்த திருவடிக்கு அடிமைபூண்ட
 இந்த உடல் ஒன்றுமட்டுமல்லவா, ஐயா - ஐயனே, எனக்கு உடல் ஆனது -
 எனக்கு உடலாய்நின்று பயன் தந்தது.
       பிறவி 
        எண்ணிலாதன என்பதை, 
        
          | "தொல்லைநம் 
            பிறவி யெண்ணிற் றொடுகடல் மணலுமாற்றா எல்லைய" |  என்னும் சிந்தாமணிச் 
        செய்யுளாலும், பல்வகை உடலெடுத்தலை, 
        
          | "புல்லாகிப் 
            பூடாய்ப் புழுவாகி மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
 கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
 வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
 செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்
 எல்லாப் பிறப்பும் பிறந்தினைத்தே னெம்பெருமான்"
 |  |