பக்கம் எண் :

கடவுள் வாழ்த்து27



ஆத்திமரநிழலில் மணலாலே சிவலிங்கம் தாபித்து ஆவின்பாலால்
திருமஞ்சனமாடி விதிப்படி அருச்சித்துப் பூசிப்பாராயினர். அவர் அங்ஙனம்
பூசித்துவருங்கால் அதன் இயல்பு அறியாதானொருவன் அதனைக்கண்டு
அவ்வூர் மறையோரிடஞ்சென்று, ‘விசாரசருமர்பாலைக் கறந்து மணலிலே
சொரிகின்றார்’ என்றுகூற, அவர்கள் எச்சதத்தனுக்கு அதனை அறிவிக்க,
அவனுஞ்சென்று கரவில் மறைந்திருந்து பார்த்து வெகுண்டு, திருமஞ்சனப்
பாற்குடத்தைக் காலால் இடறித் தள்ளினான். விசாரசருமர் அதனைக்கண்டு
அது செய்தவன் தந்தையென வுணர்ந்தும் அவன்றாளைத் துணிப்து
தகுதியெனத் துணிந்து அருகிலிருந்த கோலையெடுக்க, அதுவே மழுவாக,
அதனால் அவன் றாளை யெறிந்து வீழ்த்தினார். அப்பொழுது சிவபெருமான்
உமாதேவியாரோடு இடபவாகனத்தில் எழுந்தருளிவந்து ‘அடுத்ததாதை
யினியுனக்கு நாமென்றருள் செய்து,’ தொண்டர்கட்கு அதிபராக்கிச்
சண்டேசராம் பதமும் அளித்துத் தாம் சடையிலணிந்திருந்த கொன்றை
மாலையையும் எடுத்துச்சூட்டியருளினார் என்பது. இதனைத் திருத்தொண்டர்
புராணத்தா லறிக. இவ் வரலாறு சைவத்திரு முறைகள் பலவற்றிலும் எடுத்துப்
போற்றப் பெற்றுள்ளது.

"பரடைந்த பாலதாட்டப் பேணாதவன் றாதை
வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந்தான் றனக்குத்
தாரடைந்த மாலைசூட்டித் தலைமைவகுத்த தென்னே
சீரடைந்த கோயின்மல்கு சேய்ஞலுர் மேயவனே"

என்று திருஞானசம்பந்தரும்,

"ஆமலி பாலுநெய்யு மாட்டியர்ச் சனைகள்செய்து
பூமலி கொன்றைசூட்டப் பொறாததன் றாதைதாளைக்
கூர்மழு வொன்றாலோச்சக் குளிர்சடைக் கொன்றைமாலை
தாமெனச் சண்டிக்கீந்தார் சாய்க்காடு மேவினாரே"

என்று திருநாவுக்கரசரும்,

"ஏத நன்னில மீரறு வேலி
     யேயர்கோ னுற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோத னங்களின் பால்கறந் தாட்டக்
     கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற் வெறிந்த சண்டிக்குள்
     சடைமி சைமல ரருள்செயக் கண்டு
பூத வாளிநின் பொன்னடி யடைந்தேன்
     பூம்பொ ழிற்றிருப் புன்கூரு ளானே"

என்று சுந்தரமூர்த்திகளும்,

"தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப வீசன் திருவருளாற் றேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்"

என்று மாணிக்கவாசகரும்,