பக்கம் எண் :

276திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) வண்டு உழுதாரினான் - வண்டுள் கிண்டுகின்ற வேப்பமலர்
மாலையை யணிந்த பாண்டியன், தன் மரபின் மன்னவரும் முன்னாள்
கண்டறியாத - தன் மரபிற்போந்த மன்னவர்களும் முற்காலத்துப்
பார்த்தறியாத, காட்சி கவன வாம்பரியை நோக்கி - தோற்றத்தையும் விரைந்த
செலவினையு முடைய தாவுங் குதிரைகளைப் பார்த்து, நாமும் அண்டர்
நாயகன் போல் ஆயிரம் கண்பெற்றாலும் - நாமும் தேவேந்திரனைப் போல
ஆயிரம் விழிகளைப் பெற்றாலும், உண்டு அமையா என்ற உள்ளக்
குறிப்பொடும் - (அவற்றாலும் இவற்றின் பொலிவு) பருகி முடியா என்ற
மனக்குறிப்புடன், உவகை பூத்தான் - மகிழ்ந்தான்.

     கவனம் - வேகம். அண்டர் - தேவர். நோக்குதலை உண்டலாகக்
கூறினார்;

"உண்டற் குரிய வல்லாப் பொருளை
உண்டன போலக் கூறலு மரபே"

என்பது தொல்காப்பியம்; இனி, இதனை "வாராமரபின வரக்கூறுதலும்"
என்னும் எச்சவியற் சூத்திரத்து ஒன்றென முடித்தலாற் கொள்ளலுமாம். (74)

தானென மகிழ்ச்சி யென்னத் தலைதடு மாறி வேந்தன்
மானவெம் பரிமேல் வந்த வயவரை வியந்து மிக்கார்
ஆனவ ரிவருள் யாரென் றமைச்சரை வினவ வையா
யானது வறியே னென்னறார் யாவையு மறிய* வல்லார்.

     (இ - ள்.) வேந்தன் - பாண்டியன், தான் என மகிழ்ச்சி என்னத்
தலைதடுமாறி - தான் என்றும் மகிழ்ச்சி என்றும் பாகுபடுத்து உணர
முடியாமல் மயங்கி, மானவெம்பரி மேல் வந்த வயவரை வியந்து - பெருமை
பொருந்திய வெய்ய குதிரைகளின் மேல் ஏறிவந்த வீரரை நோக்கி
வியப்புற்று, இவருள் மிக்கார் ஆனவர் யார் என்று அமைச்சரை வினவ -
இவருள்ளே தலைவர்யார் என்று மந்திரியாராகிய அடிகளை வினாவ,
யாவையும் அறியவல்லார் - அனைத்தையும் அறியவல்ல அவ்வடிகள்,
ஐயா - ஐயனே, யான் அது அறியேன் என்றார் - யானும் அதனை அறியே
னென்று கூறினார்.

     தான்வேறு மகிழ்ச்சிவேறு என்னுமாறின்றி மகிழ்ச்சியே வடிவாயினன்
என்பார் ‘தானென மகிழ்ச்சி யென்னத் தலைதடுமாறி’ என்றார். ஆனவர்,
எழுவாய்ச் சொல். எப்பொருளை அறித்தால் மற்றெல்லாம் அறிந்தனவாகுமோ
அப்பரம் பொருளையே அயிவல்லாராகலின் ‘யாவையு மறிய வல்லார்’
என்றார். (75) எண்சீரடியாசிரிய விருத்தம்

அண்டமெலா மாதார மாகத் தாங்கு
     மானந்தத் தனிச்சோதி யண்டந் தாங்குஞ்
சண்டமறைப் பரிதனக்கா தார மாகித்
     தரிக்கவொரு காலத்து மசைவி லாத

     (பா - ம்.) * யாரையுமறிய.