|  மாகிய அடியார்களனைவரும், 
        அமுதுசெய்து அகன்றார் - திருவமுது செய்து நீங்கினர்; ஒரு தம்பிரான் சித்தராய் - ஒரு தம்பிரான் சித்த மூர்த்தியாய்,
 சிறுநகையினராய் - புன்னகையுடையராய், இத்தராத லத்து அரியராய்
 இருக்கின்றார் என்றார் - இந்நிலவுலகின்கண் கிடைததற் கரியராய்
 இருக்கின்றார் என்று கூறினர்.
       முத்துப்போலும் 
        நகை அராப்போலும் அல்குல் என நிரனிறை. இருக்கின்றார் - அமுது செய்யாதிருக்கின்றார். (14)
 
	
	| நவம ணிக்கலன் பூத்தபூங் கொம்பரி னடந்து துவரி தழ்க்கனி வாயினாள் சுவாகதங் கிலவென்
 றுவமை யற்றவர்க் கருக்கிய மாசன முதவிப்
 பவம கற்றிய வடிமலர் முடியுறப் பணிந்தாள்.
 |       (இ 
        - ள்.) தவர் இதழ்க்கனி வாயினாள் - பவளம்போன்ற இதழையும் கொவ்வைக் கனிபோன்ற வாயையுமுடைய பொன்னனையாள், நவமணிக்கலன்
 பூத்த - நவரத்தினங்களாலாகிய அணிகலன்கள் மலர்ந்த, பூங்கொம்பரின்
 நடந்து - பூங்கொம்புபோல நடந்து, சு ஆகதம் கில என்று - (தேவரீர் வரவு)
 நல்வரவல்லவா என்று கூறி, உவமை அற்றவர்க்கு - ஒப்பற்ற சித்த
 மூர்த்திகளுக்கு, அருக்கியம் ஆசனம் உதவி - அருக்கியமு ஆசனமுங்
 கொடுத்து, பவம் அகற்றிய அடிமலர் - அடியார் பிறப்பை நீக்கிய திருவடி
 மலர்கள், முடி உறப் பணிந்தாள் - முடியுற் பொருந்த வணங்கினாள்.
       முதலடி 
        இல்பொருளுவமை. கொம்பர் : ஈற்றுப்போலி. அருக்கிய என்றதனால் இனம் பற்றிப் பாத்தியம் ஆசமனீயம் என்பவும் கொள்க.
 அகற்றிய என்பதனைச் செய்யியவென்னும் வினையெச்சமாக்கித், தனது
 பிறப்பைப் போக்குதற்கு என்றுரைத்தலுமாம். அடிமலரை முடி பொருந்த
 என்றுமாம். (15)
 
	
	| எத்த வஞ்செய்தே னிங்கெழுந் தருளுதற் கென்னாச் சித்தர் மேனியும் படிவெழிற் செல்வமு நோக்கி
 முத்த வாணகை யரும்பநின் றஞ்சலி முகிழ்ப்ப
 அத்தர் நோக்கினா ரருட்கணா லருள்வலைப் பட்டாள்.
 |       (இ 
        - ள்.) சித்தர்மேனியும் - சித்தமூர்த்திகளின் திருமேனியையும், படிவு எழில் செல்வமும் நோக்கி - வடிவினது அழகின் செல்வத்தையுங்
 கண்டு, முத்தவாள் நகை அரும்ப நின்று - முத்துப்போன்ற ஒள்ளிய
 புன்னகை தோன்ற நின்று, இங்கு எழுந்தருளுதற்கு எத்தவம் செய்தேன்
 என்னா - (தேவரீர்) இங்கு எழுந்தருளுதற்கு என்ன தவம் செய்தேனோ
 வென்று, அஞ்சலி முகிழ்ப்ப - கையைச் சென்னியிற் குவித்து வணங்க,
 அத்தர் நோக்கினார் அருள் கண்ணால் - இறைவர் திருவருள் நாட்டத்தால்
 நோக்கி யருளினார்; அருள் வலைப்பட்டாள் - (பொன்னனையாள்) திருவருளாய வலையில் 
        அகப்பட்டனள்.
       படிவு 
        - படிவம் : ஈறு தொக்கது. செல்வம் - பெருக்கம். நோக்குதல் - சுட்சு தீட்சையாகும். பத்தி வலையிற்பட்ட பரமனது அருள் வலையிற்
 |