|  பட்டாள் பொன்னனையாள் 
        என்க. அருள் வலைப்பட்டாள் என்பதனை வினையாலணையும் பெயராக்கி வருஞ் செய்யுளிற் கூட்டி யுரைத்தலுமாம். (16)
 
         
          | ஐய *உள்ளெழுந் 
            தருளுக வடிகணீ ரடியேன் உய்ய வேண்டிய பணிதிரு வுளத்தினுக் கிசையச்
 செய்ய வல்லனென் றஞ்சலி செய்யவுண் ணகையா
 மைய னோக்கியை நோக்கிமீ னோக்கிதன் மணாளன்.
 |       (இ 
        - ள்.) ஐய - ஐயரே, உள் எழுந்தருளுக - உள்ளே எழுந்தருளக் கடவீர்; அடிகள் நீர் - அடிகளாகிய நீர், அடியேன் உண்ண - அடியாளாகிய
 யான் ஈடேற, வேண்டிய பணி - விரும்பிய தொண்டினை, திருவுளத்தினுக்கு
 இசையச் செய்யவல்லன் என்று - திருவுள்ளத்திற்குப் பொருந்துமாறு
 செய்யவல்லேன் என்று கூறி, அஞ்சலி செய்ய - வணங்க, மீன் நோக்கி தன்
 மணாளன் - அங்கயற்கண்ணி மணாளனாகிய சோமசுந்தரக் கடவுள், உள்
 நகையா - உள்ளே நகைத்து, மையல் நோக்கியை நோக்கி - மையல்
 விளைக்கும் பார்வையுடைய பொன்னனையாளைப் பார்த்து.
       ஐய 
        அடிகள் என ஒருமையும் பன்மையும் விரவிவந்தன; ஐய, அசையுமாம். யான் உய்ய நீர் வேண்டிய பணி என்க. உள் நகையா என்றும்,
 மையல் நோக்கியை என்றும் கூறிய குறிப்பால், அவர் தம்மை அணைய
 வேண்டினாரெனக் கருதி, வேண்டிய பணி திருவுளத்தினுக் கிசையச் செய்ய
 வல்லன் என்று மறைத்துக் கூறினள் என்க. உள் நகையா - புன் முறுவல்
 செய்து. தன் : சாரியை. (17)
 
	
	| வடியை நேர்விழி யாய்பெரு வனப்பினை சிறிதுன் கொடியை நேரிடை யெனவிளைத் தனையெனக் கொன்றை
 முடியி னானடி யாரமென் முகிழ்முலைக் கொடிதாழ்ந்
 தடிய னேற்குவே றாயொரு மெலிவிலை யையா.
 |       (இ 
        - ள்.) வடியை நேர்விழியாய் - மாவடுவின் பிளவினையொத்த விழிகளையுடையாய், பெருவனப்பினை - பேரழகுடைய நீ, உன் கொடியை
 நேர் இடை எனச் சிறிது இளைத்தனை என - உனது கொடி போன்ற
 இடைபோலச் சிறிது உடல் மெலிந்திருக்கின்றாய் (அதன் காரணம் யாது)
 என்று வினவ, மெல்முகிழ் முலைக் கொடி - மெல்லிய அரும்பாகிய
 கொங்கை முகிழ்த்த கொடிபோன்ற அவள், கொன்றை முடியினான் அடி
 ஆரத்தாழ்ந்து - கொன்றை மலரணிந்த திருமுடியை யுடைய சிவபிரான்
 திருவடிகளைப் பொருந்த வணங்கி, ஐயா - ஐயனே, அடியனேற்கு வேறாய்
 ஒரு மெலிவு இலை - அடியேற்கு வேறொரு மெலிவு இல்லை (ஆனால்).
       இளைத்திருப்பதன் 
        காரணம் யாதென்று வினவ என விரித்துரைக்க. வேறாயொரு மெலிவிலை என்றதனால் ஒரு மெலிவுண்டென்பது
 |