|  குறிப்பிட்டவாறாயிற்று. 
        அது வருஞ் செய்யுளிற் பெறப்படும். மெலிவின் காரணம் மெலிவு எனப்பட்டது. (18)
 
         
          | எங்க ணாயகர் 
            திருவுரு க்காண்பதற் கிதயந் தங்கு மாசையாற் கருவுருச் சமைத்தனன் முடிப்பேற்
 கிங்கு நாடொறு மென்கையில் வருபொரு ளெல்லாம்
 உங்கள் பூசைக்கே யல்லதை யொழிந்தில வென்றாள்.
 |       (இ 
        - ள்.) எங்கள் நாயகர் - எங்கள் தலைவராகிய சிவபெருமானுடைய, திரு உருக் 
        காண்பதற்கு - திருவுருவத்தை ஆக்குவதற்கு. இதயம் தங்கும் ஆசையால் - உள்ளத்தில் நிலைபெற்ற விருப்பத்தினால், கரு உருச்
 சமைத்தனன் - மெழுகினாற் கருக்கட்டி வைத்தேன்; முடிப் பேற்கு -
 அதனைப் பொன்னினால் (செய்து) முடிக்கக் கருதிய எனக்கு, இங்கு
 நாள்தொறும் என்கையில் வருபொருள் எல்லாம் - இங்கு நாள் தோறும் என்
 கையில் வருகின்ற பொருள் முழுதும், உங்கள் பூசைக்கே அல்லது -
 அடியார்களாகிய உங்கள் பூசனைக்கே சரியாவதல்லாமல், ஒழிந்தில என்றாள் -
 எஞ்சவில்லை என்று கூறினாள்.
       சிவபெருமானாகிய 
        சித்த மூர்த்திகளைச் சிவனடியாராகக் கருதி உங்கள் பூசைக்கே என்றாளென்க. அல்லதை, ஐ : சாரியை. (19)
 
	
	| அருந்து நல்லமு தனையவ ளன்புதித் திக்கத்* திருந்து தேனென விரங்குசொற் செவிமடுத் தையர்
 முருந்து மூரலாய் செல்வமெய் யிளமைநீர் மொக்குள்
 இருந்த வெல்லையு நிலையில வென்பது துணிந்தாய்.
 |       (இ 
        - ள்.) அருந்து நல் அமுது அனையவள் - உண்ணுதற்குரிய இனிய அமிழ்தம்போன்ற பொன்னனையாள், அன்பு - அன்போடு, தித்திக்க -
 இனிமை பொருந்த, திருந்து தேன் என - இனிமை திருந்திய தேன்போல,
 இரங்குசொல் - கூறுஞ் சொற்களை, ஐயர் செவிமடுத்து - சித்தமூர்த்திகள்
 கேட்டு, முருந்து மூரலாய் - மயிலிறகினடி போன்ற பற்களையுடையவளே,
 செல்வம் மெய் இளமை - செல்வமும் யாக்கையும் இளமையம், நீர்மொக்குள்
 இருந்த எல்லையும் நிலை இல என்பது துணிந்தாய் - நீரிற் றோன்றுங் குமிழி
 இருந்த அளவும் நிலைபெறுவன அல்லவென்பதனை நன்கு உணர்ந்தாய்.
 
       சித்திக்க 
        என்னும் பாடத்திற்கு அன்பு கைகூட என்றுரைக்க. இரங்கு சொல் - இரக்கந் தோன்றக் கூறுஞ்சொல் எனலுமாம். (20)
 
	
	| அதிக நல்லற நிற்பதென் றறிந்தனை யறத்துள் அதிக மாஞ்சிவ புண்ணியஞ் சிவார்ச்சனை யவற்றுள்
 அதிக மாஞ்சிவ பூசையு ளடியவர் பூசை
 அதிக மென்றறிந் தன்பரை யருச்சனை செய்வாய்.
 |  
      (பா 
        - ம்.) * அன்பு சித்திக்க.   |