|  அன்னம் - அன்னப்பறவை 
        யானது, நீர் பிரித்து - நீரை ஒதுக்கி, உண்ணும் தூய தீம்பால் போல் - தூய்மையோடு கூடிய இனிய பாலை உண்ணுவது
 போல, சுந்தரன் சரிதம் தன்னை - சோமசுந்தரக்கடவுளின்
 திருவிளையாடலை, கொள்க - கொள்ளக்கடவர் எ - று.
      உம்மை, 
        உயர்வு சிறப்பு. கவி - கொங்குதேர் வாழ்க்கை என்னும் முதலையுடைய செய்யுள். குற்றங் கூறியவர் - நக்கீரர்; இவ்வரலாற்றை
 இப்புராணத்திலுள்ள தருமிக்குப் பொற்கிழி யளித்த படலத்தால் அறிக.
 அன்னம் பால் உண்ணுவதுபோல எனப் பிரித்துக் கூட்டப்பட்டது. நீர்
 பிரித்து என்றதற்கேற்ப என் சொற் குற்றத்தை நீக்கி என உரைத்துக்கொள்க.
 (26)
 
        
          | [கலிநிலைத்துறை] |   
          | கவைக்கொ 
            ழுந்தழ *னாச்சுவை கண்டவூ னிமையோர் சுவைக்க வின்னமிழ தாயின துளக்கமல் சான்றோர்
 அவைக்க ளம்புகுந் தினியவா யாலவா யுடையார்
 செவிக்க ளம்புகுந் தேறுவ சிறியனேன் பனுவல்.
 |       (இ 
        - ள்.) கொழும் தழல் - கொழுவிய அக்கினியின், கவை நா - பிளவுபட்ட நாவினால், சுவைகண்ட - சுவைகாணப்பெற்ற, ஊன் - ஊன்கள்,
 இமையோர் - தேவர்கள், சுவைக்க - சுவைத்துண்ண, இன் அமிழ்து ஆயின
 - இனி அமழ்தமாயின; (அதுபோல), சிறியனேன் பனுவல் - சிறியேனுடைய
 செய்யுட்கள், துளக்கம் இல் சான்றோர் - ஐயந்திரிபில்லாத புலவர்களின்,
 அவைக்களம் புகுந்து - அவைக் களஞ்சென்று, இனியவாய் -
 மதுரமுடையனவாய், ஆலவாய் உடையார் - திருவாலவாயுடைய இறைவரின்,
 செவிக்களம் புகுந்து ஏறுவ - திருச்செவியினிடத்தில் சென்று
 பொருந்துவனவாம் எ - று.
      தழல் 
        - வேள்வித்தீ. கொழுந்து அழல் எனப் பிரித்தலும் ஆம். துளக்கம் - நடுக்கம். அவைக்களம் : இருபெயரொட்டுப் பண்புத் தொகை.
 அவைக்களம் புகுந்து என்றது சான்றோரால் கேட்டுத் துகளறுக்கப்பட்டு
 என்றபடி. (27)
 
         
          | பாய வாரியுண் 
            டுவர்கெடுத் துலகெலாம் பருகத் தூய வாக்கிய காரெனச் சொற்பொருள் தெளிந்தோர்
 ஆய கேள்வியர் துகளறுத் தாலவா யுடைய
 நாய னார்க்கினி தாக்குப நலமிலேன் புன்சொல்.
 |        (இ 
        - ள்.) கார் பாயவாரி உண்டு - மேகமானது பரந்த கடல் நீரைப் பருகி, உவர் கெடுத்து - (அதிலுள்ள) உப்பைப்போக்கி, உலகு எலாம் பருக
 - உலகிலுள்ளாரனைவரும் உண்ணும்படி, தூய ஆக்கிய என - தூயவாகும்
 படி செய்தாற்போல, சொல்பொருள் தெளிந்தோர் ஆய - சொல்லையும்
 பொருளையும் குற்றமற உணர்ந்தோராகிய, கேள்வியர் - கேள்வி வல்லுநர்,
 
      (பா 
        - ம்.) * கவைக்கொழுந் தெழுநா.   |