|  என மாறுக. வேடுருவாகி 
        நின்றவன் மின்னுக்கால மேனி கொண்டு வேல் ஏந்தி நின்றான் என்க. (15)
 
         
          | சீறியா யிரம்ப 
            ரிக்கோர் சேவகன் வந்தே னென்னாக் கூறினா னெதிர்த்தான் வெள்ளிக் குன்றவன் பத்து நூறு
 மாறிணப் பரிக்கு மட்டோர் வயவனீ யன்றோ வெண்ணில்
 ஈறிலாப் பரிக்கு மொற்றைச் சேவகன் யானே யென்றான்.
 |       (இ 
        - ள்.) சீறி - சினந்து, ஆயிரம் பரிக்கு ஓர் சேவகன் வந்தேன் என்னா - ஆயிரம் குதிரைகட்கு ஒரு வீரனாகிய யான் வந்தேனென்று,
 கூறினான் எதிர்த்தான் - சொல்லி எதிர்த்தான்; வெள்ளிக் குன்றன் - வெள்ளி
 மலையையுடைய இறைவன், நீ மாறு இலா பத்து நூறு பரிக்கு மட்டு ஓர்
 வயவன் அன்றோ - நீ பகைமையில்லாத ஆயிரங் குதிரைகளுக்கு மட்டும்
 ஒரு சேவகன் அல்லவா, எண்ணில் ஈறு இலா பரிக்கும் - எண்ணில் முடிவு
 பெறாத குதிரைகளுக்கும், ஒற்றைச் சேவகன் யானே என்றான் - ஒற்றைச்
 சேவகன் யானே என்று கூறியருளினான்.
       சேவகன் 
        எனத் தன்மையிற் படர்க்கை வந்தது. கூறினான் : முற்றெச்சம். நீ ஆயிரம் பரிக்கோர் 
        வீரனென இறுமாந்தாய், யானோ எண்ணில்லாத பரிக்கோர் வீரனாவேன் என இறைவனாகிய 
        வேடுவன் தன்னைப் புகழ்ந்து கூறினன் என்க. (16)  
	
	| என்றசொல் லிடியே றென்ன விருசெவி துளைப்பக் கேட்டு நின்றவ னெதிரே மின்று நீட்டிச்சென் மேகம் போலச்
 சென்றுவேல் வலந்தி ரித்துச் செயிர்த்தன னதிர்த்துச் சீற
 வன்றிற னூற்றுப் பத்து வயப்பரிக் கொருவ னஞ்சா.
 |       (இ 
        - ள்.) என்ற சொல் இடி ஏறு என்ன - என்று இறைவனாகிய வேடன் கூறிய சொல்லானது 
        இடியேற்றின் ஒலியைப் போல, இரு செவி துளைப்ப - இரண்டு காதுகளையுந் துளைக்க, கேட்டு 
        நின்றவன் எதிரே - கேட்டு நின்ற சோழனெதிரே, மின்னு நீட்டிச் செல் மேகம் போலச் 
        சென்று - மின்னலை நீட்டிச் செல்லும் முகில் போலச் சென்று, வேல் வலம் திரித்துச் 
        செயிர்த்தனன் - வேற்படையை வலமாகச் சுழற்றிச் சினந்து, அதிர்த்துச் சீற - முழங்கிச் 
        சீற வன்திறல் நூற்றுப் பத்து வயப்பரிக்கு ஒருவன் அஞ்சா - மிக்க வலிமையுடைய ஆயிரங் 
        குதிரைகட்கு ஒரு சேவகனாகிய சோழன் பயந்து.       நின்றனன் 
        அங்ஙனம் நின்றவனெதிரே என விரித்துரைக்க. செயிர்த்தனன் : முற்றெச்சம், வன்றிறல் : ஒரு பொருளிருசொல். (17)
 
	
	| யாமினி யிந்த வேலா லிறப்பதற் கைய மில்லை யாமென வகன்றான் மாவோ டாயிரம் பரிக்கோர் மன்னன்
 காமனை வெகுண்ட வேடன் மறைந்தனன் கங்குற் சோதி
 மாமக னதுகண் டோடும் வளவனைத் துரத்திச் சென்றான்.
 |  |