|
மதுமலர்க்கிடங்கில்
வீழ்ந்தான் - அங்குள்ள தேன் நிறைந்த பூக்களையுடைய
ஓர் அகழியில் வீழ்ந்தனன்.
காலொன்று
என்புழி ஒன்று எண்ணுப்பெயர்; ஏனைய பெயரெச்ச
முதனிலை. சோழனைக் காற்றோடும் பாண்டியனைக் கனலோடும் ஒப்பித்தார்.
(20)
மீனவன் மதுரை
மூதூர் மேற்றிசைக் கிடங்கில் வீழ
மானவெம் புரவி யோடும் வளவனும் வீழ்ந்தான் கூடற்
கோனவ னருளால் வானோர் குரைகடல் கடையத் தோன்றும்
ஆனையி னெழுந்தான் றென்னன் கோழிவேந் தாழ்ந்து போனான். |
(இ
- ள்.) மீனவன் மதுரை மூதூர்மேல் திசைக்கிடங்கில் வீழ -
பாண்டியன் மதுரையாகிய பழைய நகரின் மேற்புறத்துள்ள அகழியில் விழ,
மானவெம் புரவியோடும் வளவனும் வீழ்ந்தான் - பெருமையையுடைய
கொடிய குதிரையோடு சோழனும் விழுந்தனன்; கூடல் கோனவன் அருளால் -
மதுரைப் பெருமானாகிய சோமசுந்தரக் கடவுளின் திருவருளால், வானோர்
குரைகடல் கடைத் தோன்றும் ஆனையின் - தேவர்கள் ஒலிக்கின்ற
பாற்கடலைக் கடையத் தோன்றிய வெள்ளானைபோல, தென்னன் எழுந்தான்
- பாண்டியன் எழுந்தான்; கோழிவேந்து ஆழ்ந்து போனான் - உறையூர்
வேந்தனாகிய சோழன் ஆழ்ந்திறந்தனன்.
விரைந்து
துரந்து சென்றானாகலின் அவன் வீழ்ந்தவுடன் இவனும்
வீழ்ந்தான். அருளால் எழுந்தான் என்றியையும். இறைவனருளால் எழுந்தான்
எனவே விழுந்ததும் அவனருளால் என்பது பெற்றாம். மேற்செய்யுளில்
மாலொன்று களிற்றின் வீழ்ந்தான் எனக் கூறி, இதில், ஆனையின் எழுந்தான்
என்ற நயம் பாராட்டற்குரியது. இதனால் அகழியின் பெருமையும்
கூறியவாறாயிற்று. கோழி - உறையூர். ஒரு கோழி யானையைப் போர் வென்ற
இடத்தில் இயற்றப்பட்டதாகலின் இப் பெயரெய்திற்று;
"முறஞ்சொலி
வாரண முன்சம முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர்" |
எனச் சிலப்பதிகாரம்
கூறுதலுங் காண்க. (21)
|
[எழுசீரடி
யாசிரிய விருத்தம்]
|
பிலத்தள
வாழ்ந்த கடிமலர்க் கிடங்கிற் பெருந்தகை யவிந்தவன் றுகில்பூண்
கலத்தரும் பேழை படைபரி மான்றேர் கரியெலாங் கவர்ந்துதண் பொருநைத்
தலத்தவன் றங்க ணாயக ரணியத் தக்கதூ சணிகல னல்கி
நலத்தகை யவர்பே ரருட்கடற் கன்பு நதியெனப் பெருகிவீற் றிருந்தான்.
|
(இ
- ள்.) தண்பொருநைத் தலத்தவன் பெருந்தகை - தண்ணிய
பொருநை சூழ்ந்த நாட்டையுடையவனாகிய பெருந் தகுதியுடைய
|