|
(இ
- ள்.) நாளையும் திருவாலவாய் நாயகன் - நாளைப் பொழுதும்
திருவாலவாய்ப் பெருமான், தாமரை ஆள - தமது அடியாராகிய வாதவூரரை
ஆண்டருளும் பொருட்டு, மண் சுமந்தருளும் என்று - மண்
சுமந்தருளுவானென்று கருதி, அதனையும் காண்பான் - அதனையுங் காண,
ஊளை வெம்பரிப் பூழி போர்ப்புண்டமெய் கழுவிமீள - ஊளையிடுங்
கொடிய நரிப் பரிகளால் மேலெழுந்த புழுதியாற் போர்க்கப்பட்ட உடலைக்
கழுவித் திரும்பி வருதற்கு, வேண்டுவான்போல் - விரும்பின வனைப்போல,
வெய்யோன்கடல் குளித்தனன் - சூரியன் மேலைக் கடலில் மூழ்கினன்.
காண்பான்,
வினையெச்சம். ஊளை யென்னுங் குறிப்பால் நரி யென்பது
போந்தது. ஊளை - நரியின் கூக்குரல். இது தற்குறிப் பேற்ற
வணி. (7)
ஈச னாடல்வெம் பரிக்குழாத் தெழுந்தசெந் தூளான்
மாசு மூழ்கிய வண்டத்தை வானிலா வென்னுந்
தூசி னாலறத் துடைப்பவ னெனமணித் தொகுதி
வீசு மாழியுண் முளைத்தனன் வெண்மதிக் கடவுள். |
(இ
- ள்.) ஈசன் ஆடல் வெம்பரிக் குழாத்து எழுந்த - இறைவன்
திருவிளையாடலாற் போந்த கொடிய பரிக் கூட்டத்தினால் எழுந்த,
செம்தூளால் மாசு மூழ்கிய அண்டத்தை - செம்புழுதியால் அழுக்குப் படிந்த
அண்டத்தினை, வால்நிலா என்னும் தூசினால் அறத்துடைப்பவன் என -
வெள்ளிய நிலவாகிய ஆடையினால் முற்றுந் துடைக்கத்
தோன்றியவனைப்போல, மணித் தொகுதி வீசும் ஆழியுள் -
முத்துக்குவியல்களை அலைகளால் வீசுங் கடலின்கண், வெண்மதிக் கடவுள்
முளைத்தனன் - வெள்ளிய திங்கட் புத்தேள் தோன்றினான்.
அண்டம்
- வான்முகடு. தூசு - வெள்ளாடை. வெண்மதி,
தன்னோடியை பின்மை மாத்திரை நீக்கிய விசேடணம். (8)
சேய தாரகை வருணமாத் தீட்டிய வானம்
ஆய வேட்டினை யிருளெனு மஞ்சனந் தடவித்
தூய வாணிலா வென்னும்வெண் டூசினாற் றுடைப்பான்
பாய வேலையின் முளைத்தனன் பனிமதிக் கடவுள். |
(இ
- ள்.) சேயதாரகை வருணமாத்தீட்டிய - சேய்மையிலுள்ள உடுக்
கூட்டங்களையே எழுத்தாக எழுதப்பட்ட, வானம் ஆய ஏட்டினை -
வானமாகிய ஏட்டினை, இருள் எனும் அஞ்சனம் தடவி - இருளாகிய
மையினைத் தடவி, தூய வாள் நிலா என்னும் வெண் தூசினால் - தூய
ஒள்ளிய நிலாவாகிய வெள்ளாடையினால், துடைப்பான் - துடைப்பதற்கு,
பனிமதிக்கடவுள் - குளிர்ச்சி பொருந்திய திங்களாகிய தேவன், பாய
வேலையில் முளைத்தனன் - பரந்த கடலின் கண்ணே தோன்றினன்.
வருணம்
- எழுத்து. பனையேட்டில் ஆணிகொண்டெழுதிய
எழுத்துக்கள் நன்கு விளங்குமாறு மை பூசித் துடைப்பது வழக்கமாகலின்
இருளெனும் அஞ்சனந் தடவி நிலா வென்னும் தூசினால் துடைப்பான்
|