பக்கம் எண் :

334திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



கறையாழி வளைகளணி கரனாகி யிகல்செய்பொறி
     கரணாதி பகைகளையு நெறியால்
அறைவாய்மை யுரையின்முழு துணர்வாலெவ் வுயிருநிறை
     யரனாகி யுலகுமுறை செயுநாள்.

     (இ - ள்.) மறை ஆதிகலை பலவும் - வேத முதலிய பல நூல்களையும், மகம் ஆதி பலவினையும் - வேள்வி முதலிய பல கருமங்களையும், வழுவாது
நிறுவுதலின் - தவறாது நிலைபெறச் செய்தலால், மலர்மேல் இறை ஆகி -
தாமரை மலரில் இருக்கும் பிரமனாகியும், மலர்வனிதை பிரிவான திருமகளிர்
- பூமகளின் கூறாகிய அட்டலக்குமிகளால், இகபோகம் விளைய -
இம்மையின்பம் விளைய, முறை செயலால் - செங்கோலோச்சுவதால், கறை
ஆழிவளைகள் அணிகரன் ஆகி - குருதிக்கறை தோய்ந்த திகிரிப்
படையையும் சங்கினையும் ஏந்திய கரத்தை யுடையவனாகிய திருமாலாகியும்,
இகல் செய் பொறிகரண ஆதி பகைகளையும் நெறியால் - மாறுபாட்டினைச்
செய்யும் ஐம்பொறியும் அந்தக் கரணமு முதலிய பகையினைக் களையும்
ஒழுக்கத்தாலும், அறைவாய்மை உரையின் - கூறுகின்ற மெய்யுரையாலும்,
முழுது உணர்வால் - முற்று முணர்தலினாலும், எவ்வுயிரும் நிறை அரன்
ஆகி - எல்லாவுயிர்களிலும் நிறைந்த சிவபெருமானாகியும், உலகுமுறை
செயும் நாள் - உலகினை ஓம்பிவரு நாளில்.

     வழுவாது பயின்றும் செய்தும் நிறுவுதலின் என்க. இலக்குமி வேறு
வேறு உருவெடுது வந்தாலொத்த மகளிர் பலரால் இன்பம் விளைய
என்றுமாம். வாய்மையுரை - அரசற்கு மெய்ம்மை கூறுதலும் அரனுக்கு வேத
சிவாகமங்களை அருளிச் செய்தலும் ஆம். முழுதுணர்வு - அரசற்கு எல்லாக்
கலைகளையும் உணர்தலும் அரனுக்கு இயல்பாகவே முழுதுமுணர்தலும் எனக்
கொள்க. வேத முதலிய நூல்கள் கூறும் பொருளால் முற்று முணரு
முண்ாச்சியாலும் என ஒன்றாக்கியுரைப்பாரு முளர். இறைவன் பொறிகரணாதி
பகைகளை தலை, "பொறிவாயி லைந்தவித்தான்" என்பதனாலுணர்க. இஃது
ஏது உருவகவணி. (3)

வேட்டஞ்செய் காதலொரு நாட்டங்க வேகிவன
     மேட்டெங்கு மாதடவி யெரியா
நாட்டஞ்செய் காயுழுவை நீட்டுங்கை யானைமுக
     நாட்டும்ப லேனமிவை முதலா
ஓட்டஞ்செய் தேரிரவி கோட்டின்க ணேறியிரு
     ளூட்டந்தி மாலைவரு மளவாக்
கோட்டஞ்செய் வார்சிலையின் மாட்டம்பி னூறியுயிர்
     கூட்டுண்டு மாநகரில் வருவான்.