|  தீர்த்தங்களெல்லாம் 
        இருப்பனவாக நூற்கள் கூறுதலின் கோடு தோய்ந்த புனல் குடித்தனன் என்க. அன்று, ஏ : அசை. (8)
 
         
          | [கலி 
              நிலைத்துறை]   |   
          | ஏங்கும் 
            பெருமூச் செறியுங்கை யெறியுங் குன்றின் ஓங்குஞ் சிறுகு முடுன்றார்த்திடு முன்னும் பின்னும்
 பாங்குந் தொடருஞ் சிரிக்கும்பகு வாயை மெல்லும்
 நீங்குங் குறுகும் பழிதாவென நேர்ந்து பற்றும்.
 |       (இ 
        - ள்.) ஏங்கும் - இரங்கும்; பெருமூச்சு எறியும் - பெருமூச்சு விடும்;கை 
        எறியும் - கையோடு கைதாக்கும்; குன்றின் ஓங்கும் - மலை போல வளரும்; சிறுகும் - (அணுவாகத்) தேயும்; உடன்று ஆர்த்திடும் - வெகுண்டு
 ஆரவாரிக்கும்; முன்னும் பின்னும் பாங்கும் தொடரும் - முன்னிலும்
 பின்னிலும் இரு பக்கங்களிலும் தொடரும்; சிரிக்கும் - நகைக்கும்; பகுவாயை
 மெல்லும் - பிளந்த வாயை மெல்லும்; நீங்கும் - (சிறிது) விலகும்; குறுகும் -
 (பின்) நெருங்கும்; பழிதா என நேர்ந்து பற்றும் - பழிதா என்று கூறி எதிர்ந்து
 பிடிக்கும்.
       அப்பழி 
        உருக்கொண்டு வந்து இங்ஙனமெல்லாம் செய்யா நின்றன. பழிக்குப் பழி கொடு என்னும் பொருள்படப் 'பழிதா' என்று கூறுமென்க. (9)
 
         
          | மாசுண்ட தெய்வ 
            மணிபோற்பணி வாயிற் பட்ட தேசுண்ட தீந்தண் மதிபோலொளி தேம்பி வண்டு
 மூசுண்ட தான முகமாவுண்ட வெள்ளில் போலக்
 காசுண்ட பூணா னறைபோய கருத்த னானான்.
 |       (இ 
        - ள்.) மாசு உண்ட தெய்வ மணி போல் - மாசு படிந்து (கழுவப்படாத) தெய்வத் தன்மையுடைய மாணிக்கம் போலவும், பணி
 வாயில் பட்ட - இராகுவென்னும் பாம்பின் வாய்ப்பட்ட, தேசுஉண்ட தீந்தண்
 மதி போல் - ஒளியிழந்த இனிய தண்ணிய சந்திரன் போலவும், ஒளி தேம்பி
 - பொலிவு குன்றி, வண்டு மூசு உண்ட தானம் முகம்மா உண்ட - வண்டுகள்
 மொய்க்கும் மதநீர் ஒழுகும் முகத்தினையுடைய வேழத்தால் உண்ணப்பட்ட,
 வெள்ளில் போல - விளங்கனிபோல, காசு உண்ட பூணான் - மணிகள்
 இழைத்த அணிகளையுடைய வரகுண பாண்டியன், அறை போய கருத்தன்
 ஆனான் - உள்ளீடில்லாத மனமுடையவனானான்.
       தேசுண்ட 
        என்பதற்கு ஒளி பொருந்திய என்றுரைத்து மதிக்கு இயற்கையடை ஆக்கலுமாம். விளவிற்கு வருவதோர் நோய் யானை என்னும்
 பெயருடையது; அப்பெயருக் கேற்பவே 'வண்டு மூசுண்ட தான முகம்' என
 அடை கொடுக்கப்பட்டது; இந்நூலின், மாபாதகந் தீர்த்த படலத்தில்,
 "வெருவரு வேழமுண்ட வெள்ளில் போல் வறியனாகி" என்பதன் உரையை
 நோக்குக. அறை போதல் - அறிவின்றிட்பமாகிய உள்ளீடொழிதல். (10)
 |