| 
	
	| மறையோர்கள் பின்னும் பழிமேலிடு வண்ண நோக்கி இறையோ யிதுநான் முகன்சென்னி யிறுத்த கூடல்
 அறவேதியனைத் தினமாயிரத் தெண்காற் சூழல்
 உறவே யொழிக்கப் படு* மின்ன முரைப்பக் கேட்டி.
 |        (இ 
        - ள்.) பின்னும் பழி மேலிடும் வண்ணம் - மீண்டும் கொலைப் பாவம் ஓங்கி வளருந் தன்மையை, மறையோர்கள் நோக்கி - அந்தணர்கள்
 கண்டு, இறையோய் - மன்னனே, இது - இந்தக் கொலைப்பாவம், நான்
 முகன் சென்னி இறுத்த - பிரமன் தலையைக் கிள்ளிய, கூடல் அறவேதியனை
 - மதுரையில் வீற்றிருக்கும் அறிவுருவினனாகிய சோம சுந்தரக் கடவுளை,
 தினம் ஆயிரத்து எண்கால் சூழ உற ஒழிக்கப்படும் - நாள்தோறும்
 ஆயிரத்தெட்டு முறை வலம் வருதலால் ஒழிக்கப்படும்; இன்னம் உரைப்பக்
 கேட்டி - இன்னுஞ் சொல்லக் கேட்பாயாக.
       பிரமச்சாயை 
        ஒழிதற்குப் பிரமன் சென்னியைக் கிள்ளிய பெருமானை வணங்குதலே ஏற்புடைத்தென்றார் என்க. (11)
 
	
	| ஆனா விரத நெறியாலிரண் டைந்து வைகல் வானா டனையம் முறையால் வலஞ் செய்து வந்தாய்
 ஆனா லதற்கு வழிகாட்டுமென் றையர் கூறப்
 போனா னரசன் புனிதன்றிருக் கோயில் புக்கான்.
 |       (இ 
        - ள்.) ஆனா விரத நெறியால் - நீங்காத நோன்பின் வழி நின்று, இரண்டு ஐந்து வைகல் - பத்து நாட்கள், வான் நாடனை - சிவலோக
 நாயகனாகிய சோம சுந்தரக் கடவுளை, அம்முறையால் வலம் செய்து வந்தாய்
 ஆனால் - மேற்கூறிய எண்ணின்படி வலம் வருவாயாயின், அதற்கு வழி
 காட்டும் என்று - அவன் அக்கொலைப்பாவம் நீங்கும் நெறியைக்
 காட்டியருளுமென்று, ஐயர்கூற - அவ்வந்தணர்கள் சொல்ல, அரசன் போனான்
 - வரகுண மன்னன் சென்று, புனிதன் திருக்கோயில் புக்கான் - இறைவனது
 திருக்கோயிலையடைந்தான்.
       போனான் 
        : முற்றெச்சம். (12)  
	
	| விழியா யிரத்தோன் பழிதீர்த்தனை வேதி யன்றன் கழியாத மாபா தகந்தீர்த்தனை கௌவைக் கங்கைச்
 சுழியா றலைக்குஞ் சடையாயெனைத் தொட்ட லைக்கும்
 பழியா னதுந்தீர்த் தருளென்று பணிந்து வீழ்ந்தான்.
 |        (இ 
        - ள்.) கௌவைக் கங்கைச் சுழி ஆறு அலைக்கும் சடையாய் - ஒலியினையுடைய கங்கையாகிய சுழித்தல் பொருந்திய ஆறு அலைக்கின்ற
 சடையையுடையவனே, விழி ஆயிரத்தோன்பழி தீர்த்தனை - ஆயிரங்
 கண்களையுடைய இந்திரன் பழியை நீக்கியருளின; வேதியன் தன் கழியாத
 மாபாதகம் தீர்த்தனை - ஓர் மறையோனுடைய (எவ்வாற்றானும்) நீங்காத
 
      (பா 
        - ம்.) * ஒழியப்படும்.   |