|  மாபாதகத்தையும் நீக்கியருளினை; 
        எனைத் தொட்டு அலைக்கும் பழியானதும் தீர்த்தருள் என்று - (அதுபோல) என்னைப் பற்றி வருத்தும் பழியினையுந்
 தீர்த்தருளுவாயென்று கூறி, பணிந்து வீழ்ந்தான் - வீழ்ந்து வணங்கினான்.
       இந்திரனும் 
        ஒரு வேதியனும் அறிந்து செய்த கொலையாலாய பழியைப் போக்கிய பேரருளாளனாகிய நினக்கு அடியேன் அறியாமல் நேர்ந்த
 கொலையானாய பழியைப் போக்குதல் முறைமையே என்பான்
 அவற்றையெடுத்துரைத்தனன் என்க. கங்கைச் சடையனென்றதும் பாவத்தைக்
 கழுவும் இயல்புடையனென்பது குறிப்பிட்டபடி. பணிந்து வீழ்ந்தான்
 என்பதற்குக் கும்பிட்டு வீழ்ந்தான் எனலுமாம். (13)
 
	
	| எண்ணும் படியம் முறையால்வளைந் தேத்த வையன் விண்ணின் றியம்பு மரசேபரி மேத வேள்வி
 நண்ணும் பயனோ ரடிவபை்பினி னண்ண வெம்மைப்
 பண்ணும் வலத்தான் மகிழ்ந்தேம்பழி பஞ்சன் மன்னோ.
 |       (இ 
        - ள்.) எண்ணும்படி - ஆயிரத்தெட்டு என்று எண்ணுமாறு, அம்முறையால் வளைந்து ஏத்த - அந்நெறியால் வலம் வந்து துதிக்க. ஐயன்
 - இறைவன், விண் நின்று இயம்பும் - வானின் கண் நின்று (அசரீரியாகக்)
 கூறியருளுவன்; அரசே - வேந்தனே, பரிமேத வேள்வி நண்ணும் பயன் -
 துரங்க வேள்வியினால் வரும் பயன், ஓர் அடிவைப்பினில் நண்ண - ஓர்
 அடி பெயர்த்து வைத்தலாலே பொருந்துபடி, எம்மைப் பண்ணும் வலத்தால்
 மகிழ்ந்தேம் - எம்மை வலஞ் செய்தலாற் களிப்புற்றேம்; பழி அஞ்சல் - (இனிப்) 
        பழிக்கு அஞ்சுதலொழிக.
       வலஞ்செய்தற்கு 
        ஓர் அடியெடுத்து வைத்தல் ஓர் அசுவமேதப் பயனை அளிக்கும் என அதன் மேன்மை கூறினார். மன்னும் ஓவும் அசை
 நிலை. (14)
 
	
	| பொன்னோடு முத்தங் கொழிக்குந்துறைப் பொன்னி நாடன் நின்னோ டமராற்ற நினைந்தெழு நீயு நேர்வாய்
 அன்னோ னுனக்குப் புறகிட்டகன் றோடு நீயும்
 பின்னோடி யெட்டிப் பிடிப்பாரிற் றுரத்து மெல்லை.
 |       (இ 
        - ள்.) பொன்னோடு முத்தம் கொழிக்கும் துறை - பொன்னையும் முத்தையும் (அலைகள்) ஒதுக்கும் நீர்த் துறைகளையுடைய, பொன்னி நாடன்
 - காவிரி நாடனாகிய சோழன், நின்னோடு அமர் ஆற்ற நினைந்து எழும் -
 நின்னுடன் போர் புரியக் கருதி வருவான்; நீயும் நேர்வாய் - நீயும்
 எதிர்ப்பாய்; அன்னோன் உனக்குப் புறகிட்டு அகன்று ஓடும் - அச்சோழன்
 - உனக்குப் புறங்காட்டிப் (போர்க்களத்தினின்றும்) நீங்கி ஓடுவன்; நீயும் பின்
 ஓடி - நீயும் அவன் பின்னேயே ஓடி, எட்டிப் பிடிப்பாரின் துரத்தும் எல்லை
 - எட்டிப் பிடிப்பவரைப் போல அவனைத் துரத்தும்பொழுது.
 |