|
(இ
- ள்.) அஞ்சு கோடி யோசனை புகைந்து - அஞ்சு கோடி
யோசனை அளவு புகைந்து, இருமடங்கு அழன்றவர் - பத்துக் கோடி
யோசனை அளவுதீக்கொழுந்து விட்டெரியும் காலாக்கினியுருத்திரரும்,
தமைப்போல் ஈரஞ்சு தீ உருத்திரர் - அவரைப்போல (அவரைச் சுற்றிலு
முள்ள) பத்துக் காலாக்கினியுருத்திரரும், புடை உடுத்தவர் (அவருள்
ஒவ்வொருவரையும்) புடை சூழ்ந்து சேவித்து நிற்கும் ஒவ்வொரு கோடி
யுருத்திரர்களும், அழல்கண் நால் பூதங்கள் - நெருப்புப் போலுங்
கண்களையுடைய நால்வகைப்பூதங்களும் அண்டத்து உச்சியர் அஞ்சு நூறு
உருத்திரர் - அண்டத்து உச்சியிருள்ளவராகிய (எவரும்) அஞ்சத் தக்க நூறு
உருத்திரர்களும், அரி அயன் முதல் தேவர் அஞ்சும் - திருமால் பிரமன்
முதலிய தேவர்களும் அஞ்சுதற் கேதுவாகிய, ஆணையும் ஆற்றலும்
படைத்தவர் - ஆணையையும் வலியையும் படைத்தவராகிய, அடுகுறள்
படைவீரர் - (பகைவரைக்) கொல்லும் பூதப் படைவீரர்களும் எ - று.
அவர்
தமைப்போல் என்க. நாற்பூதங்கள் - வருணப் பூதங்கள்.
யாவரும் அஞ்சத்தக்க நூறு உருத்திரர் கீழண்ட கடாகத்தில் காலாக் கினி
யுருத்திரர் கோடியோசனை யளவுள்ள பொன்மயமான மண்டபத்தில், ஆயிர
யோசனை யுயரமும் இரண்டாயிர யோசனை அகலமும் உள்ள சிங்காதனத்தில், தமது திருமேனியின்
அழற்கொழுந்துபத்துக் கோடி யோசனையும் புகை
ஐந்துகோடி யோசனையும் உடையராய் வீற்றிருப்பர் என்றும், இவரைச் சூழ்ந்து
இவரைப்போல் பதின்மர் உருத்திரர் இருப்பர் என்றும் இவருள்
ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கோடி உருத்திரர்கள் பரிவாரமாகச் சூழ்ந்து
சேவித்திருப்பார்கள் என்றும் கூறுப; இவற்றைச் சிவதருமோத்திரம்
கோபுரவியலில்.
"அண்டகடா கக்கனமுண் டொருகோடி யதனடியுட்
கண்டிடுக காலாங்கி யுருத்திரர்க்குக் கன கமனை
யுண்டதற்குன் னதங்கோடி யோசனையீ ரைங்கோடி
மண்டியமெய்த் தழற்கொழுந்தைங் கோடியுறும் வளர்புகையும்" |
| |
"யோசனையா
யீரமனையு ளரியணையி னுயரந்தான்
யோசனையி ராயிரமென் றதன்விரிவை யுணர்ந்திடுக
தேசுடைய காலாங்கி யுருத்திரர்தந் திருமேனி
தேசுடைய முண்டழலா லயுதமென வுன்னுகவே" |
| |
"தரித்துடையறர்
வலக்கரத்திற் றயங்கொளிவாள் சரத்தினையும்
பரித்துடைய ரிடக்கரத்திற் பலகையினைத் தனுவினையு
முருத்திரர்க ளொருபதின்ம ருறைவரவ ருழையவர்போ
லுருத்திரர்க ளொவ்வொருவர்க் கொருகோடி பரிச்சிதமே" |
எனவருஞ் செய்யுகளா
லுணர்க. அண்டத் துச்சியிலுள்ள நூறு எருத்திரராவார்
பொன்மயமான அண்டகடாகப் புறம்பே இந்திரதிக்கு முதலிய பத்துத்
திக்குகளுள் இந்திர திக்கில் - கபாலீசன், அதன், புத்தன், வச்சிரதேவன்,
பிரமத்தனன், விபீதி, அவ்வியன், சாத்த, பினாகி, திரிசோதியன்,
எனப்பதின்பர்; அக்கினி திக்கில் - உருத்திரன்,உதாசனன், பிங்கலன்,
காதகன், அயன், சுவலன், தகனன், வெப்புரு, பிரமாந்தகன், சயாந்தகன் எனப்
பதின்மர்; இயம திக்கில் யாமியன், மிருத்தியு, அரன், தாதா விதாதா, கத்திரு,
காலன், தன்மன்,
|