பக்கம் எண் :

404திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) அடியேன் குலச்சிறை வெங்குருவேந்தர் அடிபணிந்து -
அடியேன் குலச்சிறை காழிமன்னரின் திருவடியை வணங்கி, விளம்பு
விண்ணப்பம் - கூறும் விண்ணப்பமாவது, இங்கு எழுந்தருளி - தேவரீர் இந்த
நாட்டிற்கு எழுந்தருளி, சமண் இருள் ஒதுக்கி - சமணாகிய இருளை ஓட்டி,
எம் இறைமகற்கு நீறு அளித்து - எமது அரசனுக்குத் திருநீறு கொடுத்து,
பொங்கு இரும்பனைசூழ் - நிறைந்த பெரிய வயல் சூழ்ந்த, தென்
தமிழ்நாட்டை - தமிழையுடைய இத்தென்னாட்டை, பூதிசாதன வழி நிறுத்தி -
பூதிசாதன நெறியில் நிறுத்தி, எங்களைக் காக்க - அடியேங்களைக் காக்கக்
கடவீர், என்ற பாசுரம் கேட்டு - என்னும் பொருளமைந்த பாசுரத்தைக்
கேட்டு, கவுணியர்க்கு இறைவர் எழுந்தனர் - கவுணியர் தலைவராகிய
ஆளுடைய பிள்ளையார் எழுந்தனர்.

     வெங்குரு - சீகாழயின் பன்னிரு பெயர்களில் ஒன்று; அசுர குரு
பூசித்த மையால் வந்த பெயர். பன்னிரு பெயர்கன் வரலாறும் மேல்
அருச்சனைப் படலத்திற் கூறப்படும். பாண்டிநாடு முற்றும் பூதி சாதனங்கள்
இழந்தன என்பார் ‘தென்றமிழ் நாட்டைப் பூதி சாதன வழி நிறுத்தி’ என்றார்.
கவுணியர் - கவுணிய கோத்திரத்தினர். (28)

ஆதகா திதுவென் றோதுவார் நாவுக் கரையர்நீர் சிறியவ ரவரோ
பாதக மஞ்சார் தம்மொடும் பன்னாட் பழகிய வெனையவர் செய்த
வேதனை யளந்து கூறுவ தென்னை விடுகதில் லம்மவோ வுமக்கிப்
போதுநாள் கோள்கள் வலியில வென்னப் புகலியர் வேந்தரும்                                            புகல்வார்.

     (இ - ள்.) நாவுக்கரையர் - அவருடனிருந்த திருநாவுக்கரசுகள்,
ஆதகாது இது என்று ஓதுவார் - ஆ இது தகாது என்று கூறுபவர், நீர்
சிறியவர் - நீரோ பாலர்; அவரோ பாதகம் அஞ்சார் - அவரோ தீவினைக்கு
அஞ்சாதவர்; தம்மொடும் பன்னாள் பழகிய என்னை - தம்மோடும்
பலவாண்டுவள் பழகிய எனக்கு, அவர் செய்த வேதனை அளந்து கூறுவது
என்னை - அவர்கள் செய்த துன்பத்தை வரை யறுத்துக் கூறுதல் எங்ஙனம்;
உமக்கு இப்போது நாள் கோள்கள் வலி இல - உமக்கு இப்போது நாள்களுங்
கோள்களும் வலியுடையனவாகவும் இல்லை; விடுகதில் - (ஆதலின்)
போதலைத் தவிர்க; என்ன - என்று கூற, புகலியர் வேந்தரும் புகல்வார் -
காழிப்பதியார்க்குத் தலைவராகிய திருஞான சம்பந்தரும் கூறுவாராயினர்.

     ஆ என்பது, அம்மவோ என்பதும் இரக்கத்தில் வந்தன. அம்ம,
கேட்பித்தற் பொருட்டுமாம். அவர் சமயத்திற் புகுந்து அவரோ டிடைவிடாது
பழகிய பயிற்சியையும் கருதாது இரக்கமின்றி நீற்றறையிலிடுதல் ஆகிய
கொடுந்துன்பங்கள் செய்த பாதகர் என்பார் ‘தம்மொடும் பன்னாட் பழகிய
வெனையவர் செய்த வேதனை அளந்து கூறுவதெவன்’ என்றார். ‘தில்’
ஒழியிசை இடைச் சொல். நாள் - நக்கத்திரம். கோள் - நவக்கோள். வலியில
- நலந்தரும் நிலையினவல்ல. (29)

எந்தையெம் பெருமா னருளிலார் போல வின்னண மிசைப்பதென்
                                      னவர்செய்
வெந்த வேதனையி னுய்ந்தநீர் நாள்கோள் விலங்குபுள் ளவுணர்பேய்
                                               பூதம்
அந்தமில் பலவு மம்மையோ டப்ப னாணையா னடப்பன வவர்நஞ்
சிந்தையே கோயில் கொண்டுவீற் றிருப்பத் தீங்கிழை யாவென
                                            வெழுந்தார்.