| 
        
	      | "பரிபுரக் 
            கம்பலை யிருசெவி யுண்ணும் குடக்கோச் சேரன் கிடைத்திது காண்கென
 மதிமலி புரிசைத் திருமுகங் கூறி
 அன்புருத் தரித்த வின்பிசைப் பாணன்
 பெறநிதி கொடுக்கென வுறவிடுத் தருளிய
 மாதவர் வழுத்துங்கூடற் கிறைவன்"
 |        எனக் 
        கல்லாடத்தும் இவ்வரலாறு குறிக்கப் பெற்றுள்ளது. 
        (10)  
         
          | [கலிவிருத்தம்] 
                |   
          | வாங்கிய 
            திருமுக மணிப்பட் டாடையிட் டாங்கிறை யடிபணிந் தகன்று பத்திரன்
 ஓங்கிய கோயிலை வலங்கொண் டொல்லென
 நீங்கிமேல் வரைப்புல நெறிக்கொண் டேகுவான்.
 |        (இ 
        - ள்.) வாங்கிய திருமுகம் - பெற்ற திருமுகத்தை, மணி - அழகிய, பட்டு ஆடை இட்டு - பட்டாடையில் வைத்து, இறை அடி பணிந்து -
 இறைவன் திருவடியை வணங்கி, ஆங்கு அகன்று - அங்கு நின்றும் நீங்கி,
 பத்திரன் - பாணபத்திரன், ஓங்கிய கோயிலை வலம் கொண்டு - உயர்ந்த
 திருக்கோயிலை வலம்வந்து, ஒல்லென நீங்கி - விரைந்து அகன்று,
 மேல்வரைப் புலம் நெறிக்கொண்டு ஏகுவான் - மேற்றிசையிலுள்ள
 மலைநாட்டிற்கு வழிக்கொண்டு செல்வானாயினன்.
       ஒல்லென 
        : விரைவுக்குறிப்பு. வரைப்புலம் - மலைநாடு. (11)  
	
	| கொல்லையுங் குறிஞ்சியுங் கொதிக்கும் வெம்பரற் கல்லத ரத்தமுங் கடந்து முட்புறப்
 பல்சுளைக் கனியடி யிடறப் பைப்பைய
 நல்வளங் கெழுமலை நாடு நண்ணினான்.
 |       (இ 
        - ள்.) கொல்லையும் குறிஞ்சியும் - முல்லைநிலத்தையும் குறிஞ்சி நிலத்தையும், கொதிக்கும் வெம்பரல் கல் அதர் அத்தமும் கடந்து -
 கொதிக்கின்ற வெய்ய பருக்கைக் கற்களையுடைய வழியினையுடைய பாலை
 நிலத்தையும் கடந்து, முள்புறம் பல் சுளைக்கனி அடி இடற - புறத்தில்
 முட்களையும் பல சுளைகளையுமுடைய பலாக்கனிகள் அடியில் இடற,
 பைப்பைய - மெல்லமெல்ல, நலவளம்கெழு மலை நாடு நண்ணினான் - நல்ல
 வளங்கள் நிறைந்த மலைநாட்டினை அடைந்தான்.
       மலைவளங் 
        கூறுவார் கனியடியிடற என்றார். பையப் பைய என்பது முன் மொழியிறுதி அகரம் மெய்யொடுங் கெட்டுப் பைப்பைய என்றாயது.
 (12)
 
	
	| அலைகட னெடுந்துகி லந்த நாடெனுந் தலைமக டனக்குவான் றடவு குன்றுபூண்
 முலையென விளங்கின முகத்திற் றீட்டிய
 திலகமே யானது திருவஞ் சைக்களம்.
 |  |