|
இயலும் சடைமௌலிப்
புராணர் திருவிளையாட்டால் - பொன்போன்ற
சிவந்த சடைமுடியையுடைய பழம்பொருளாயுள்ள சோமசுந்தரக்கடவுளின்
திருவிளையாட்டினால், அந்நிலையில் - இருள்மிக்க அப்பொழுதில்,
திசையெல்லாம் - எட்டுத் திக்குகளிலும், கருங்கொண்மூ ஆர்த்து எழுந்த -
கரிய முகில்கள் முழங்கி எழுந்தன.
தவான்
- கெடான். உலகளியும்படி திருவுளங்கொண்ட புராணர்
திருவிளையாட்டால் என விரிக்க. அன்னிலையில் - ஓர் இரவின் இருளில்.
அந்நிலையில் எனப் பாடங்கொண்டு பத்திரன் புறப்படும் பொழுதில்
என்றுரைத்தலுமாம். (4)
தடித்துநிரை புடைபரப்பித் தடுமாறித் திசைமயங்கத்
துடித்துவிட வாயரவஞ் சோர்ந்துசுருண் டளையொதுங்க
இடித்துடுவின் கணம்புதைப்ப விருள்கான்று சலபதிமுன்
முடித்திடுவான் வரவிடுத்த* முகிலேழும் வளைந்தவென+ |
(இ
- ள்.) விடவாய் அரவம் - நஞ்சு பொதிந்த வாயினையுடைய
பாம்புகள், துடித்து சோர்ந்து சுருண்டு அளை ஒதுங்க - உடல் துடித்துச்
சோர்ந்து சுருண்டு புற்றில் நுழையுமாறு, தடித்து நிரைபுடை பரப்பி இடித்து -
மின் வரிசைகளைப் பக்கங்களிற் பரப்பி இடித்து, திசை தடுமாறி மயங்க -
(உயிர்கள்) திசைதடுமாற மயங்கும்படி, உடுவின் கணம் புதைப்ப இருள்
கான்று - விண்மீன்களின் கூட்டம் புதைபட இருளினைச் சொரிந்து,
சலபதி - நீர்க்கடலாகிய வருணன், முன் - முன்னொருநாளில்,
முடித்திடுவான் வரவிடுத்த முகில் ஏழும் வளைந்த என - (மதுரையை)
அழித்தற் பொருட்டு ஏவிய ஏழுமுகில்களும் வளைந்தாற்போல வளைந்து.
தடித்து
- மின். தடுமாறி திசைமயங்க என்பதற்கு எட்டுத்திசையில்
உள்ளவர்களும் தடுமாறி மயங்க என்றுரைத்தலுமாம். புதைப்ப - புதைபட.
சலபதி - வருணன். முடித்திடுவான் : வினையெச்சம். (5)
கருங்கடலை விசும்பெடுத்துக் கவிழ்ப்பதென வெண்டாரை
நெருங்கிருளி னிருப்புக்கோ னிரைத்ததென நிறங்கருக
ஒருங்குசொரிந் துள்ளுணரா ருள்ளம்போ லுட்புறம்பு
மருங்கொடுகீழ் மேலென்று தெரியாத மயங்கிருள்வாய். |
(இ
- ள்.) வெண்தாரை - வெள்ளிய தாரைகள், நெருங்கு இருளின்
- செறிந்த இருளினால், இருப்புக்கோல் நிரைத்தது என நிறம் கருக -
இருப்புக் கோல்களை நிரைபட நட்டுவைத்தாற்போல நிறம் கருகித்தோன்ற
(அவற்றை), கருங்கடலை விசும்பு எடுத்துக் கவிழ்ப்பது என - கரிய கடல்
நீர் முழுதையும் வான் எடுத்துக் கவிழ்ப்பது போல, ஒருங்கு சொரிந்து -
சேரப்பொழிதலால், உள் உணரார் உள்ளம்போல் - ஆன்மாவாகிய
தம்மையும
(பா
- ம்.)* வரவழைத்த.+வளைந்ததென.
|