பக்கம் எண் :

பலகையிட்ட படலம்423



நாணி விழித்து ஆவி பிழைத்தேன் போலும் - வெள்கி விழித்து உயிர்
பிழைத்தேன் போலும்.

     கனவின் கண், பலிக்குவந்த இறைவர்மேற் காதலுற்றாளொருத்தி
அதனைத் தன் தோழிக்குக் கூறுவது பொருளாகக் கொண்ட இது முதலிய
மூன்றும் பாணனார் பாடிய இசைப்பாட்டாக ஆசிரியர் இயற்றியன வெனக.
கையறவு - துன்பம்; காம நோய். போலும் என்பன ஒப்பில் போலி. (10)

ஒண்ணுதலாய் வெண்டலைகொண்டு டுண்பலிக்கு நம்மனையி                                       னூடே கூடற்
கண்ணுதலா ருள்ளாளக் கானமிசைத் தென்னுள்ளங் கவர்ந்தார்                                       போலுங்
கண்ணுதலார் பாடு மவிநயங்கண் டாகங் கலப்பேன் பாதி
பெண்ணுருவ மாயிருந்தார் வெள்கிவிழித் தாவி பெற்றேன்                                       போலும்

.      (இ - ள்.) ஒள்நுதலாய் - ஒள்ளிய நெற்றியினையுடைய தோழியே
வெண்தலை கொண்டு - வெள்ளிய தலையோட்டினை ஏந்தி, உண்பலிக்கு -
உண்ணும் பலியின் பொருட்டு, நம்மனையின் ஊடே - நமது இல்லின் கண்
(வந்து), கூடல் கண்ணுதலார் - கூடலில் எழுந்தருளிய நெற்றிக்
கண்ணையுடைய இறைவர், உள்ளாளக் கானம் இசைத்து - உள்ளாள இசை
பாடி, என் உள்ளம் கவர்ந்தார் போலும் - எனது சிந்தையைக் கொள்ளை
கொண்டார் போலும், கண்ணுதலார் பாடும் அவிநயம் கண்டு - அவர் பாடும்
இன்பச் சுவையவிநயத்தைக் கண்டு, ஆகம் கலப்பேன் - அவரது திருமார்பிற்
கலக்கத் தொடங்கினேன்; பாதி பெண் உருவமாய் இருந்தார் - ஒரு கூறு
பெண் வடிவமாயிருந்தனர்; வெள்கி விழித்து ஆவி பெற்றேன் போலும் -
(அதனால்) நாணி (அக்கலவி ஒழிந்து) விழித்து நீங்கி உயிர் பெற்றேன்
போலும்.

     உள்ளாளம் இன்னதென்பது முன் கூறப்பட்டது. அவிநயம் - காம
அவிநயம்; இதன் இயல்பினை,

"காம வவிநயம் கருதுங் காலைத்
தூவுள் ளுறுத்த வடிவுந் தொழிலும்
காரிகை கலந்த கடைக்கணுங் கவின்பெறு
மூரன் முறுவல் சிறுநிலா வரும்பலும்
மலர்ந்த முகனும் இரந்தமன் கிளவிம்
கலந்தன பிறவுங் கடைப்பிடித் தனரே"

என்பதனால் அறிக. (11)

ஐயரியுண் கண்ணாய் திருவால வாயுடையா ரையங்                                       கொள்வான்
மையனகை செய்தென் வனமுலையின் மேற்செங்கை                                 வைத்தார் போலும்
மையனகை செய்தென் வனமுலைமேற் கைவைப்ப மாழ்கிச்                                       சோர்வேன்
தையலிடங் கண்டு நடுநடுங்கி விழித்தாவி தரித்தேன்                                       போலும்.

     (இ - ள்.) ஐ அரி உண் கண்ணாய் - அழகிய செவ்வரி படர்ந்த
மையுண்ட கண்களை உடைய தோழியே, திருவாலவாய் உடையார் -