பக்கம் எண் :

இசைவாதுவென்ற படலம்429



     (இ - ள்.) வரகுணன் கதி அடைந்தபின் - வரகுணபாண்டியன்
சிவகதி அடைந்தபின், அம்பொன் மௌலி சூடிய - அழகிய பொன்னாலாகிய
முடிசூடிய, இராச விராசப் புரவலன் - இராசராச மன்னன் என்பான்,
புவிமடச்தையை வேட்டு்ப் புயம தழீஇக் கொடு - நிலமகளை மணந்து
தோளிற் றழுவிக்கொண்டு, நயம் தரும் நாளில் - (குடிகளுக்கு) இன்பமளித்து
வரும்பொழுது, பரவும் மன்பதை புரந்து ஒழுகு - பரவிய அந்தப்
பாண்டியனுக்கு உரியராயுள்ளார், அஞ்சன் உண் கண் மரபின் வந்த மடவார்
பலர் - மையுண்ட கண்களையுடைய தனது மரபில் வந்த மகளிர் பலர்; ஏனை
மையல் செய்யும் மடவார் பலர் - மற்றை மயக்கஞ் செய்யுங் காமக்கிழத்தியர்
பலர்.

     மரபின் வந்த மடவார் - குடிப்பிறந்தவராகிய மனைக்கிழத்தியர்.
மையல் செய்யு மடவார் - கணிகையருள்ளே காமக்கிழத்தியர். மாது. ஓ :
அசைகள். (2)

அன்ன போகமட வாரு ளொருத்தி
     யரச னுக்கமுது மாவியு மாகும்
மின்ன னாண்மதுர சீத மிசைக்கும்
     விஞ்சை யின்றுறைவ லாளவ ளுக்கும்
பன்ன காபரண னின்னிசை பாடும்
     பத்திரன் பொருவில் கற்புடை யாட்கும்
மன்னு கீதவினை யாலிகன் மூள
     வழுதி காதன்மட மாது பொறாளாய்.

     (இ - ள்.) அன்னபோக மடவாருள் ஒருத்தி - அந்தக் காமக்
கிழத்தியருள் ஒருத்தி, அரசனுக்கு அமுதும் ஆவியும் ஆகும் மின்னனாள் -
மன்னனுக்கு அமுதும் உயிருமாகிய மின்னலை ஒத்தவள்; மதுரகீதம்
இசைக்கும் விஞ்சையின் துறைவலாள் - இனிய இசை பாடும் கல்வியின்
துறையில் வல்லவன்; அவளுக்கும் - அம்மாதுக்கும், பன்னக ஆபரணன்
இன் இசை பாடும் - பாம்பணியினையுடைய இறைவன்திருமுன் இனிய
இசையினைப் பாடுகின்ற, பத்திரன் பொரு இல் கற்பு உடையாட்கும் -
பாணபத்திரனது ஒப்பற்ற கற்பினை யுடைய மனைவிக்கும், மன்னுகீத
வினையால் - (இன்பம்) நிலைபெற்ற இசைபாடுஞ் செயலால், இகல்மூள -
பகைமூள, வழுதி காதல் மடமாது பொறாளாய் - பாண்டியனது காதலுக்குரிய
இளமையாகிய மாது மனம் பொறாதவளாய்.

     போக மடவார் - இன்பம் விளைக்கும் காமக்கிழத்தியர். (3)

பாடி னிக்கெதிரொர் பாடினி தன்னைப்
     பாட விட்டிவள் படைத்த செருக்கை
ஈடழிப்பலென வெண்ணி யெழிஇத்தன்
     னிறைமகற்கஃ திசைத்தலு மந்தத்