|  
             (இ 
        - ள்.) அத்தலை நின்ற மாயோன் - அங்கு நின்ற திருமால், ஆதி  
        செங்கரத்து - முதல்வனது சிவந்த திருக்கையின்கண், கமலப் போது பூத்தது  
        ஓர் காந்தள் ஒப்ப - தாமரை மலரில் மலர்ந்ததாகிய ஒரு காந்தள் மலரை  
        ஒக்க, நங்கை கைதலம் வைத்து - இறைவியின் திருக்கரத்தை வைத்து, அரு  
        மனு வாய் ஓத - அரிய மந்திரத்தை வாய் கூற, கரக நீர் மாரி பெய்தான் -  
        கரகத்திலுள்ள நீரைப் பொழிந்தான் (தாரை வார்த்தான்); தொத்து அலர்  
        கண்ணி விண்ணோர் - பூங் கொத்தலர்ந்த மாலையையுடைய தேவர்கள்,  
        தொழுது பூமாரி பெய்தார் - வணங்கி மலர் மழை பொழிந்தார்கள் எ - று.  
           மலயத்துவச 
        பாண்டியன் இன்மையானும் திருமால் உமைக்கு  
        உடன்பிறப்பாமுரிமையுடைய னாகலானும் அவன் தாரை  
        வார்த்தளித்தானென்க. அயனும் மாலும் இத்தகை உரிமையுடையரென்பது,  
      
      
        
	      "அறுகெடுப் 
            பாரய னும்மரியு 
                 மன்றிமற் றிந்திர னோடமரர் 
            மறுமுறு தேவர்க ணங்களெல்லா 
                 நம்மிற்பின் பல்ல தெடுக்கவொட்டோம்" 
             | 
	 
	 
			
	
	   
      என்னும் திருப்பொற் 
        சுண்ணத்தா னறிக. நீரை மிகுதியாகச் சொரிந்தா  
        னென்பார் 'நீர்மாரி பெய்தான்' என்றார்; பின் 'பூமாரி பெய்தார்' என்பதை  
        நோக்க நயமுடைத்தாதலுங் கருதி. கமலப் போது பூத்ததோர் காந்தளொப்ப'  
        என்றது இல்பொருளுவமை. (178)  
      
	
	ஆடினா ரரம்பை மாதர் விஞ்சைய ரமுத கீதம் 
		பாடினா ரரவென் றார்த்துப் பரவினார் முனிவர் வானோர் 
		மூடினார் புளகப் போர்வை கணத்தவர் மூடிமேற் செங்கை 
		சூடினார் பலரு மன்றற் றொடுகட லின்பத் தாழ்ந்தார்.  | 
	 
	 
		
	
		
       
           (இ 
        - ள்.) அரம்பை மாதர் ஆடினார் - அரம்பையர்கள் ஆடினார்கள்.  
        விஞ்சையர் அமுத கீதம் பாடினார் - வித்தியாதரர்கள் அமுதம் போன்ற  
        இசைகளைப் பாடினார்கள்; முனிவர் அர என்று ஆர்த்துப் பரவினார் -  
        முனிவர்கள் அரகரவென்று முழங்கித் துதித்தார்கள்; வானோர் புகளப்  
        போர்வை மூடினார் - தேவர்கள் புளகமாகிய போர்வையாற் பொதியப்  
        பெற்றார்கள்; கணத்தவர் முடிமேல் செங்கை சூடினார் - சிவ கணத்தவர்கள்  
        முடியின் மேல் சிவந்த கைகளைக் குவித்தார்கள்; பலரும் மன்றல்  
        இன்பத்தொடு கடல் ஆழ்ந்தார் - அனைவரும் திருமண இன்பமாகிய கடலில்  
        அமிழ்ந்தார்கள் எ - று. 
            கடலினொருபுறம் 
        சகரரால் தோண்டப் பட்டமையின் 'தொடு கடல்'  
        என்றார். (179)  
      
	
	புத்தனா ரெறிந்த கல்லும் போதென மிலைந்த வேத 
		வித்தனா ரடிக்கீழ் வீழ விண்ணவர் முனிவ ரேனோர் 
		சுத்தநா வாசிகூறக்* குங்குமத் தோயந் தோய்ந்த 
		முத்தவா லரிசி வீசி மூழ்கினார் போக வெள்ளம்.  | 
	 
	 
		
	
		
       
       
           (பா 
        - ம்.) * ஆசிகூற.   
       |