|       (இ 
        - ள்.) தொழும் தொழில் மறந்து - (பெரியாரைக்காணின்) வணங்குங் கடப்பாட்டினை மறந்து, வேடத்தொழில் உவந்து உழல்வீர் -
 வேடர்களின் தொழிலை விரும்பி உழல்கின்றீர், நீர்மண் உழுந்தொழில்
 உடைய நீரால் - நீர் நிலத்தினை உழுதலாகிய தொழிலை யுடைய
 தன்மையால், பன்றியின் உதரத்து எதி - பன்றியின் கருப்பத்திலுற்று,
 கொழுந்தழல் அனைய - கொழுவிய நெருப்பினை ஒத்த (சினத்தினை
 யுடைய), ஏனக் குருளையாய் - பன்றிக்குட்டிகளாய்த் தோன்றி தன்தை
 தாயை இழந்து அலமுறுமின் என்னா - தந்தையையுந் தாயையும் இழந்து
 துன்ப அலமுறுமின் என்னா - தந்தையையுந் தாயையும் இழந்து துன்ப
 மெய்துவீராகஎன்று, கடிய சாபம் இட்டனன் - கொடிய சாப மிட்டனன்.
       உழல்வீர் 
        : விளி. உழுங்குலத்திற் பிறந்து அத்தொழிலைக் கை விட்டுக் கொடுமைசெய் துழலும் நீர் நிலத்தை உழுமியல்புடைய பன்றிக்
 குருளைகளாகப் பிறப்பீர் என்றான் என்க. அலமுறுமின் - துன்பம்
 எய்துமின்; அலம் - துன்பம். (7)
 
         
          | பாவத்தை 
            யனைய மைந்தர் பன்னிரு பேரு மஞ்சிச் சாவத்தை யேற்றெப் போது தணிவதிச் சாப மென்ன
 ஆவத்தை யகற்று மீச னருட்கழ னினைந்து வந்த
 கோவத்தை முனிவு செய்தக் கடவுளர் குரவன் கூறும்.
 |       (இ 
        - ள்.) பாவத்தை அனைய மைந்தர் பன்னிருபேரும் - பாவமே உருவெடுத்தாற் போன்ற மைந்தர் பன்னிருவரும், அஞ்சி - பயந்து,
 சாவத்தை ஏற்று - சாபத்தினை ஏற்று, இச்சாபம் தணிவது எப்போது என்ன
 - இந்தச் சாபம் நீங்குவது எப்பொழுது என்று வேண்டி வினவ, அக்கவுளர்
 குரவன் - தேவகுருவாகிய அவ் வியாழன், வந்த கோவத்தை முனிவுசெய்து
 - தனக்கு வந்த சினத்தினை வெறுத்து, ஆவத்தை அகற்றும் ஈசன் அருள்
 கழல் நினைந்து கூறும் - உயிர்களுக்கு நேர்ந்த) இடையூற்றினை நீக்கும்
 இறைவனது அருளுருவாகிய திருவடியைச் சிந்தித்துக் கூறுவான்.
       சாபம் 
        முதலியவற்றிலே பகரம் வகரமாய்த் திரிந்து நின்றது. சினத்தினைச் சினந்தான் என்க. (8)
 
        
	| என்னைனா ளுடையகூட லேகநா யகனே யுங்கட் கன்னையாய் முலைதந் தாவி யளித்துமே லமைச்ச ராக்கிப்
 பின்னையா னந்தவீடு தருமெனப் பெண்ணோர் பாகன்
 தன்னையா தரித்தோன் சொன்னான் பன்னிரு தனயர் தாமும்.
 |       (இ 
        - ள்.) என்னை ஆள் உடைய கூடல் ஏக நாயகனே - என்னை ஆளாகவுடைய கூடலம்பதியில் எழுந்தருளிய தனித் தலைவனாகிய
 சோமசுந்தரக் கடவுளே, உங்கட்கு அன்னையாய் முலைதந்து ஆவி அளித்து,
 உங்களுக்குத் தாயாய்வந்து முலைகொடுத்து உயிரைப் புரந்து, மேல் - பின்,
 அமைச்சர் ஆக்கி - பாண்டியனுக்கு அமைச்சர்களாகச் செய்தருளி, பின்னை
 - அதன்பின், ஆனந்த வீடுதரும் என - பேரின்ப வீட்டினையும் அருளுவான்
 என்று, பெண் ஓர் பாகன் தன்னை ஆதரித்தோன் சொன்னான்-
 |