|  வண்டுகள் ஒலிக்கும் 
        ஒலியும், மங்கல முழவின் ஓசை - மங்கலமாகிய மத்தள ஒலியும், மந்திர வேத ஓசை - மந்திர ஒலியும் மறை ஒலியும், செங்கை ஆடு
 எரியின் ஓசை - சிவந்த கையின்கண் அசைகின்ற தீயின் ஒலியும், திருவடிச்
 சிலம்பின் ஓசை - திருவடியிலுள்ள சிலம்பின் ஒலியும் ஆகிய இவைகள்,
 எங்கணும் நிரம்பி - எங்கும் பரவி, அன்பர் இரு செவிக்கு அமுதம் ஊற்ற -
 அடியார்களின் இரண்டு செவிகளுக்கும் அமுதத்தைப் பொழியவும் எ - று.
       கங்கையொலி, 
        வண்டொலி, எரியொலி, சிலம்பொலி என்னும் இவை ஆடுதலால் நிகழ்வன. எரியினோசை - தீயிலுண்டாகும் சடுலவொலி.
 செவிக்குமென்னும் முற்றும்மை தொக்கது. (16)
 
	
	| ஆடினா னமல மூர்த்தி யஞ்சலி முகிழ்த்துச் சென்னி சூடினா ரடியில் வீழ்ந்தார் சுருதியா யிரநா வாரப்
 பாடினார் பரமா னந்தப் பரவையிற் படிந்தா ரன்பு
 நீடினார் நிருத்தா னந்தங் காண்பது நியமம் பூண்டார்.
 |       (இ 
        - ள்.) அமல மூர்த்தி ஆடினான் - தூயனாகிய சோம சுந்தரக் கடவுள் திருக்கூத்தாடியருளினான்; நிருத்தானந்தம் காண்பது நியமம் பூண்டார்
 - ஆனந்தக் கூத்தைக் காண்பதையே நியமமாக மேற்கொண்ட
 முனிவரிருவரும், அஞ்சலி முகிழ்த்துச் சென்னி சூடினார் - கைகளைக் கூப்பி
 முடியின்கண் தரித்தார்கள்; அடியில் வீழ்ந்தார் - திருவடியில் வீழ்ந்து
 வணங்கினார்கள்; நா ஆர ஆயிரம் சுருதி பாடினார் - நா நிரம்ப அளவற்ற
 சுருதிகளைப் பாடினார்கள்; பரமானந்தப் பரவையில் படிந்தார் - பேரின்பக்
 கடலில் மூழ்கினார்கள்; அன்பு நீடினார் - அன்பு விஞ்சினார்கள் எ - று.
       'அன்னதோர் 
        தவிசினும்பர்' என்னுஞ் செய்யுண் முதல் இதில் 'ஆடினானமல மூர்த்தி' என்பது காறும் ஒரு தொடர். செயவெனெச்சமெல்லாம்
 ஆடினான் என்னும் முற்றுவினை கொண்டு முடியும். பரமானந்தம்,
 நிருத்தானந்தம் என்பன தீர்க்க சந்திகள். காண்பது : தொழிற்பெயர். (17)
 
	
	| முனிவர்கந் தருவுர் வானோர் தானவர் மோன யோகர் புனிதகிம் புருட ராதிப் புலவரு மிறைஞ்சி யன்பின்
 கனிதரு மின்பத் தாழ்ந்தார் திருமணங் காண வந்த
 மனிதருங் காணப் பெற்றார் மாதவர் பொருட்டான் மன்னோ.
 |       (இ 
        - ள்.) மாதவர் பொருட்டால் - அம் முனிவரிருவர் பொருட்டால், முனிவர் 
        - முனிவர்களும், கந்தருவர் - கந்தருவர்களும், வானோர் - தேவர்களும், தானவர் - அவுணர்களும், மோன யோகர் - மவுன
 நிலையையுடைய யோகிகளும், புனித கிம்புருடர் ஆதிப்புலவரும் - தூய
 கிம்புருடர் முதலிய தேவ கணங்களும், இறைஞ்சி - வணங்கி, அன்பின் கனி
 தரும் இன்பத்து ஆழ்ந்தார் - அன்பின் முதிர்ந்த இன்பத்திலமிழ்ந்தினார்கள்;
 திருமணம் காண வந்த மனிதரும் காணப் பெற்றார் - திருமணத்தைக்
 காணுதற்கு வந்த மக்களும் அதனைக் காணப் பெற்றார்கள் எ - று.
 |