| 
        
	      | ழுகொந்தொளி மணியுந் தபனியத் 
            திரளுங் கோழரைச் சந்தனக் குறடும் கந்தமிக் குயிர்க்குங் காழகிற்றுணியுங் கையரிக் கொண்டுவீ ழருவி
 மைந்துடைத் திசையெண் கரிகளு நடுக்கு மண்டுபே ரோதையி
 னொழுகும்
 அந்தர நிவந்த வேமகூ டத்தி னமர்விரூ பாக்கனே யெனவும்ழு
 |  என்னும் காஞ்சிப் 
        புராணச் செய்யுளா னறிக. எண்ணி யாங்கே அடைய என ஒரு சொல் விரித் துரைக்க. மலை - ஸ்ரீசைலம்; திருப்பருப்பதம். இது
 மல்லிகார்ச்சுனம் என்னும் பெயரு முடைத்து. இது மூவர் தேவாரமும் பெற்ற
 வடநாட்டுத் திருப்பதி. அடுக்கு உவகை பற்றியது; விரைவு பற்றியதுமாம். (11)
 
        
	| சுரபிநீள் செவியி லிங்கச் சுடருரு வாயி னான்றன் இரவினிற் றிருத்தேர் மன்றல் நடக்குமூ ரிவ்வூர் மேலை
 உரவுநீர்க் கரைத்தேண் மாதத் துயர்ந்தகார்த் திகையிற் றேரூர்ந்
 தரவுநீர்ச் சடையான்வேள்வி நடக்குமூ ரவ்வூர் காண்மின்.
 |       (இ 
        - ள்.) சுரபி நீள் செவி சுடர் இலிங்க உருவாயினான்றன் இரவினில் - பசுவினது நீண்ட காதைப்போல ஒளியினையுடைய இலிங்க
 வடிவாகிய இறைவனது சிவ நிசியில், திருத்தேர் மன்றல் நடக்கும் ஊர்
 இவ்வூர் - திருத்தேர் விழா நடக்கும் திருக்கோகரணம் இத் திருப்பதியாம்;
 மேலை உரவு நீர்க்கரை - மேலைக் கடற்கரையில், தேள் மாதத்து உயர்ந்த
 கார்த்திகையில் - கார்த்திகைத் திங்களில் சிறந்த கார்த்திகை நாளில்,
 அரவுநீர்ச் சடையான் தேர் ஊர்ந்து - பாம்பையுங் கங்கையையு மணிந்த
 சிவ பெருமான் தேரில் ஏறியருள, வேள்வி நடக்கும் ஊர் அவ்வூர் -
 திருவிழா நடக்கும் திருவஞ்சைக்களம் அத் திருப்பதியாம்; காண்மின் -
 பாருங்கள்.
       சுரபி 
        நீள் செவி - ஆனின் நெடிய காது; கோகர்ணம். இராவணன் இலங்கையில் நிறுவுமாறு சிவபிரான்பாற் பெற்றுக் கொணர்ந்த சிவலிங்கத்தை
 வானோர் வேண்டுகோளின்படி விநாயகர் வாங்கிக் கீழ்வைத்துப் பிரதிட்டை
 செய்துவிடலும், இராவணன் அதனைப் பெயர்த் தெடுக்கத் தன்
 ஆற்றல்கொண்டு இழுத்தகாலை அவ்விலிங்கம் பசுவி்ன் காதுபோற்
 குழைந்தமையின் கோகர்ணம் எனப் பெறுவதாயிற்று. சுடருருவாயினான்றன்
 இரவு - மகா சிவராத்திரி. தேர் மன்றல் - இரதோற்சவம். இது
 திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய இருவர் பாடல்பெற்ற துளுவ
 நாட்டுத் திருப்பதி. உரவு நீர் - வலிய நீர்; கடல். தேள் மாதம் - விருச்சிக
 ராசியில் ஆதித்தன் இருக்கும் கார்த்திகைத் திங்கள். உயர்ந்த கார்த்திகை -
 கார்த்திகைத் திங்களில் வரும் திருக்கார்த்திகை. ஊர்ந்து என்பதை ஊர
 எனத் திரிக்க. அஞ்சைக் களம் என்பது சுந்தரர் பாடல் பெற்ற மலைநாட்டுத்
 திருப்பதி. வேள்வி நடக்கும் ஊர் சோமநாதம் என்பாரு முளர். (12)
 
	
	| விற்பயி றடக்கை வேடன் மென்றவூன் பாகம் பார்த்தோன் பொற்புறு கிரியீ தண்டம் புழைபட விடத்தா ணீட்டி
 அற்புதன் காளி தோற்க வாடிய தீதுமா நீழற்
 கற்புடை யொருத்தி நோற்கும் பிலமிது காண்மின் காண்மின்.
 |       (இ 
        - ள்.) வில்பயில் தடக்கைவேடன் மென்ற ஊன் - வில்லையேந்திய பெரிய கையையுடைய வேடர் குலத்தினராகிய கண்ணப்பர் மென்ற
 ஊனினை, பாகம் பார்த்தோன் பொற்பு உறு கிரி ஈது - சுவை பார்த்த
 இறைவன் எழுந்தருளிய அழகிய திருக்காளத்திமலை இது; அண்டம் புழைபட
 
 |