|  இடத்தாள் நீட்டி 
        - அண்டந் தொளைபடுமாறு இடதுகாலை நீட்டி, அற்புதன் ஞானவடிவினனாம் இறைவன், காளி தோற்க ஆடியது இது - காளி
 தோல்வியடைய ஆடியருளிய திருவாலங்காடு இது; மாநீழல் - மாமரத்தின்
 நிழலில், கற்புடை ஒருத்தி நோற்கும் பிலம் இது காண்மின் காண்மின் -
 கற்புடைய காமாக்ஷியம்மை தவஞ் செய்யும் பிலத்துவாரமாகிய காஞ்சிபுரம்
 இது பாரும் பாரும்.
       பாகம் 
        பார்த்தல் - சுவை பார்த்தல்; ஈண்டுத் திருவமுது செய்தல் என்னும் பொருட்டு. கண்ணப்பர் ஊனினை மென்று அளித்தமையை
 
	
	| ழுவெய்யகனற் பதங்கொள்ள வெந்துளதோ வெனுமன்பால் நையுமனத் தினிமையினி னையமிக மென்றிடலாற்
 செய்யுமறை வேள்வியோர் முன்புதருந் திருந்தவியில்
 எய்யும்வரிச் சிலையவன்றா னிட்டவூ னெனக்கினியழு
 |  என்னும் பெரியபுராணச் 
        செய்யுளா னறிக. இத்தலம் பாம்பும் யானையும் வழிபட்டமையால் காளத்தி யென்னும் பெயர் பெற்றது; விராட் புருடனுக்கு
 விசுத்தித்தானமாகவும், ஐம்பூதத் தலங்களுள் வாயுத்தலமாகவும், தென்
 கயிலாயம் என்று சிறப்பிக்கப் பெறுவதாகவும் உள்ளது; அன்பு பிழம்பாகிய
 கண்ணப்பர் ஆறுநாளிலே முத்தி பெற்று இறைவற்கு வலப்பாகத்தில்
 எழுந்தருளியிருக்கும் பெருமையுடையது; மூவர் தேவாரமும் பெற்ற
 தொண்டைநாட்டுத் திருப்பதிகளுள் ஒன்று. அற்புதன் காளி தோற்க ஆடியது
 - சிவபெருமான் தம்மோடு வாது செய்த காளியை ஊர்த்துவ தாண்டவம்
 புரிந்து தோல்வியுறுவித்த தலம்; திருவாலங்காடு; ஐந்து மன்றங்களுள் வடக்கி
 லுள்ளதாகிய இரத்தின மன்றம்; காரைக்காலம்மையார் தலையாலே நடந்து
 வந்து இறைவனுடைய திருவடிக்கீழ் என்று மிருக்கும் பெருமை சான்றது;
 மூவர் தேவாரங்களுடன் அம்மையார் பாடிய பதிகங்களும் பெற்றுள்ள
 தொண்டை நாட்டுத் திருப்பதி; இஃது அடுத்துள்ள பழையனூருடன் சேர்த்துப்
 பழையனூ ராலங்காடு என்று பதிகங்களிற் கூறப்பெற்றுள்ளது.
 காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்து பதிகங்கள் பாடித்
 திருவடிக்கீழ் இருத்தலை,
 
         
          | ழுஅப்பரி சருளப் பெற்ற வம்மையுஞ் 
            செம்மை வேத மெய்ப்பொரு ளானார் தம்மை விடைகொண்டு வணங்கிப் போந்து
 செப்பரும் பெருமை யன்பாற் றிகழ்திரு வாலங் காடாம்
 நற்பதி தலையி னாலே நடந்துபுக் கடைந்தா ரன்றேழு
 |  
 
         
          | ழுஆலங்கா டதனி லண்ட முறநிமிர்ந் 
            தாடு கின்ற கோலங்காண் பொழுது கொங்கை திரங்கியென் றெடுத்துத் தங்கு
 மூலங்கா ணாதார் தம்மை மூத்தநற் பதிகம் பாடி
 ஞாலங்கா தலித்துப் போற்று நடம்போற்றி நண்ணு நாளில்ழு
 |  
 
         
          | ழுமட்டவிழ்கொன் றையினார்தந் 
            திருக்கூத்து முன்வணங்கும் இட்டமிகு பெருங்காத லெழுந்தோங்க வியப்பெய்தி
 எட்டியில வம்மீகை யெனவெடுத்துத் திருப்பதிகம்
 கொட்டமுழ வங்குழக னாடுமெனப் பாடினார்ழு
 |  
 
         
          | ழுமடுத்தபுனல் வேணியினா ரம்மையென 
            மதுரமொழி கொடுத்தருளப் பெற்றாரைக் குலவியதாண் டவத்திலவர்
 |  |