பக்கம் எண் :

494திருவிளையாடற் புராணம் [திருவாலவாய்க் காண்டம்]



     (இ - ள்.) அடிமுடி விலங்கும் புள்ளும் அளந்திடாது - அடியையும்
முடியையும் பன்றியாகிய திருமாலும் அன்னமாகிய பிரமனும் அளந்து
காணாமல், அண்டம் கீண்டு நெடுகிய நெருப்புநின்ற நிலை இது -
அண்டத்தைக் கிழித்து நீண்ட அனல் வடிவாய் நிலைபெற்ற அண்ணாமலை
இது; இருவர் முள்வாய்க் கங்கவடிவு எடுத்து நோற்கும் மலை இது - இருவர்
முள்போலும் வாயினையுடைய கழுகுவடிவ மெடுத்துத் தவம்புரியும்
திருக்கழுக்குன்றம் இது; பல்வேறு ஊழி இடை உற - பலவேறாகிய ஊழிகள்
இடையில் வர, முன்னும் பின்னும் இருக்கும் அக்குன்றைக் காண்மின் -
அவற்றுக்கு முன்னும் பின்னும் இருக்கும் அப்பழ மலையைப் பாருங்கள்.

     நெடுகிய நெருப்பு நின்ற நிலை - தாம் தாமே பரமெனத் தருக்குற்ற
திருமாலும் பிரமனும் முறையே பன்றியுருவும் அன்னவுருவுங் கொண்டு தேடி
அடியும் முடியுங் காணாது அயர்க்குமாறு நீண்ட அக்கினியுருவாகிய
சிவபெருமான் நின்ற இடம்; திருவண்ணாமலை; இது தேயுவிலிங்கத்தலம்;
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரையர் என்னும் இருவர் தேவாரம்பெற்ற
நடுநாட்டுத் திருப்பதி. கங்கம் - கழுகு. கங்கவடி வெடுத்து இருவர் நோற்கும்
மலை - நான்கு யுகங்களிலும் முறையே சண்டன் பிரசண்டன், சம்பாதி சடாயு,
சம்புகுத்தன் மாகுத்தன், பூடா விருத்தா என்னும் இவ்விருவர் கழுகுருக்
கொண்டு சிவபெருமானைப் பூசிக்கப்பெற்ற மலை; திருக்கழுக் குன்றம்;
இற்றைக்கும் இரு கழுகுகள் பூசித்தலைப் பல்லோ ரறிவர். இது மூவர்
தேவாரம் பெற்ற தொண்டை நாட்டுத் திருப்பதி. பல்வே றூழி இடையுற
முன்னும் பின்னும் இருக்கும் குன்று - எண்ணிறந்த பிரளயங்கள் இடையே
வந்து கழிய அவற்றின் முன்னும் பின்னும் அழிவின்றி நிலைபெற்றிருக்கும்
பழமையுடைய மலை; திருமுது குன்றம், விருத்தாசலம்; இப்பதியில்
நம்பியாரூரர் இறைவனைப் பாடிப் பொன்பெற்று மணி முத்தாநதியி லிட்டுத்
திருவாரூர்க் கமலாலயத்தில் எடுத்த அற்புதச் செய்தி பெரியபுராணத்தால்
அறியப்படும். இது மூவர் தேவாரமும் பெற்ற நடுநாட்டுத் திருப்பதி. (15)

அவுணரிற் கள்வ னான வந்தகற் காய்ந்து மூன்று
புவனமுங் கவலைதீர்த்த புண்ணியன் புரமீ தாகும்
தவலரும் புரங்கண் மூன்றுந் தழனுதற் றிருக்கண் சாத்திப்
பவமறு மூவ ரன்பிற் பட்டவன் பதியைக் காண்மின்.

     (இ - ள்.) அவுணரில் கள்வனான அந்தகன் காய்ந்து - அவுணருள்
வஞ்சமிக் குடையவனாகிய அந்தகாசுரனைக் கொன்று, மூன்று புவனமும்
கவலைதீர்த்த புண்ணியன் புரம் ஈது ஆகும் - மூன்று
உலகங்களிலுள்ளவர்களின் துன்பத்தையும் நீக்கிய அற வடிவினனாகிய
சிவபெருமானது திருக்கோவலூர் வீரட்டானம் இஃதாகும்; தவல்
அரும்புரங்கள் மூன்றும் - அழிதல் இல்லாத மூன்று புரங்களிலும், நுதல்
திரு தழல் கண்சாத்தி - நெற்றியிலுள்ள அழகிய நெருப்பு விழியைச் சாத்தி
(அவற்றை அழித்து, ஆங்குள்ள), பவம் அறு மூவர் அன்பில் பட்டவன்
பதியைக் காண்மின் - பிறப்பற்ற மூவர்களின் அன்புவலையில் அகப்பட்ட
அவ்விறைவன் பதியாகிய திருவதிகை வீரட்டானத்தைப் பாருங்கள்.

     அந்தகற் காய்ந்த வரலாறாவது, இரணியாக்கன் புதல்வனாகிய
அந்தகாசுரன் என்பான் பிரமனை நோக்கித் தவம்புரிந்து வரம்பெற்று
இந்திரன் முதலிய இமையவர்களை வருத்தும் பொழுது அவர்கள்
சிவபெருமானைச் சரண்புக இறைவன் போரி லெதிர்த்த அவுணர்களை