|
(இ
- ள்.) தென்னர் மரபு - பாண்டியர் குலம், இறந்தது எனப் படு
பழியில் - ஒழிந்த தென்று சொல்லப்படும் பழியில், ஆழவரும் செவ்வி
நோக்கி - அழுந்தவருங் காலத்தை நோக்கி, பொன் அவிர் தார் முடி
புனைந்து - பொன்னாற் செய்யப்பட்டு விளங்கும் மாலையை யணிந்த
முடியினைச் சூடி, கோல் ஒச்சி வருகின்றாய் போரும் - செங்கோல் செலுத்தி
வருகின்றாய் போலும், இனிமேலும் இந் நிலைமைக்கு இடையூறு இன்றே என
- இனியும் வழி வழியாய் வரும் இவ்வரசியல் நிலைமைக்கு இடையூறு
இல்லையே என்று, தலைவி இயம்ப லோடும் - பிராட்டியார் விண்ணப்பித்த
வளவில், தமிழர் கோமான் - பாண்டியர் பெருமானாகிய இறைவன், தன்
இறைவி உட்கோளை அகம் கொண்டு - தன் நாயகியின் உள்ளக் கிடையைத்
திருவுளத்திற் கொண்டு, மகிழ்ந் திருந்தார் - மகிழ்ச்சி யுற்றிருந்தான் எ - று.
தென்னர்
மர பென்பது இறந்த தென்பத னோடும் ஆழ என்பதனோடும்
தனித் தனி இயையும்; படு பழி எனப் பிரித்து, இறந்த தென்று சொல்ல
மிக்கபழியில் ஆழவரும் என்றுரைத்தலுமாம். அவிர் முடி யென்க. போலும்
என்பது கட்டுரைச் சுவைபட நின்ற அசைச் சொல். இனிமேலும் என்றது
வழக்கு நோக்கியாம். இடையூறும், உம் : அசை. உட்கோள் - புதல்வற்பேறு
வேண்டு மென்னும் எண்ணம். (31)
ஆகச் செய்யுள் 920
|