| 
        
	| விடுத்தனள் குமுதப் போதில் வெண்ணிலா வெள்ளம் போல்வாய்
 மடுத்தன ளருத்தி னாடன்
 மைந்தனை யெம்பி ராட்டி.
 |        (இ 
        - ள்.) எம்பிராட்டி - எங்கள் பிராட்டியார், தன் மைந்தனை - அங்ஙனம் தோன்றிய தம் புதல்வனை, எடுத்தனள் மோந்து புல்லி ஏந்தினள்
 - எடுத்து உச்சி மோந்து தழுவி ஏந்தி, காந்தன் கையில் கொடுத்தனள்
 வாங்கி - தம் நாயகன் கையிற் கொடுத்து மீள வாங்கி, வீங்கு கொங்கை
 நின்று இழிபால் வெள்ளம் - பருத்த கொங்கைகளினின்றும் சொரியும் பால்
 வெள்ளத்தை, விடுத்தனள் - சொரிந்து, குமுதப் போதில் வெள் நிலா
 வெள்ளம்போல் - செவ்வாம்பல் மலரில் சந்திரன் தனது வெள்ளிய நிலவின்
 பெருக்கை (மடுத்தல்) போல, வாய் மடுத்தனள் அருத்தினாள் - திருவாயிற்
 புகட்டி உண்பித்தார் எ - று.
       குழவியைக் 
        கணவன் கையிற் கொடுத்தல் மரபு. பால் வெள்ளத்தை வள்ளத்தில் விடுத்தென்க;
 
        
          | "வரையுரங் கிழித்த 
            வேளும் வாய்வைத் தருந்தாத விளமுலை" |  எனப் பிராட்டி திருவவதாரத்திற் 
        கூறியிருத்தல் காண்க.       சந்திரன் 
        நிலா வெள்ளத்தை மடுத்தல்போல எனவிரிக்க; இவ்வுவமை மிக்க சிறப்புடைத்து. எடுத்தனள், ஏந்தினள், கொடுத்தனள், விடுத்தனள்,
 மடுத்தனள் என்பன முற்றெச்சங்கள். (15)
 
        
	| சலத்தலைக் கிடக்கைப் புத்தே டருநிழல் வாழ்க்கைப் புத்தேள் அலர்த்தலை யிருக்கைப் புத்தே ளாதிப்புத் தேளிர் வேதப்
 புலத்தலைக் கேள்வி சான்ற புண்ணிய முனிவ ரேனோர்
 குலத்தலை மகளி ரோடுங் கோமகன் கோயில் புக்கார்.
 |       (இ 
        - ள்.) சலத்தலைக் கிடக்கைப் புத்தேள் - திருப்பாற்கடலின் கண் அறிதுயில் கொள்ளும் திருமாலும், தரு நிழல் வாழ்க்கைப் புத்தேள் - கற்பகத் தருவின் 
        நீழலில் வாழும் இந்திரனும், அலர்த்தலை இருக்கைப் புத்தேள் -
 தாமரை மலரின்கண் இருக்கும் பிரமனும், ஆதி - முதலாகிய, புத்தேளிர் -
 தேவர்களும், வேதப் புலத்தலைக் கேள்வி சான்ற புண்ணிய முனிவர் -
 வேதத்தின்கண் மிக்க கேள்விாயல் மாட்சிமைப்பட்ட முனிவர்களும், ஏனோர்
 - மற்றவர்களும், குலத் தலை மகளிரோடும் - தலைமைபெற்ற
 குலமகளிரோடும், கோமகன் கோயில் புக்கார் - சுந்தரபாண்டியரது கோயிலுட்
 புகுந்தார்கள் எ - று.
       கிடக்கை 
        - கிடத்தலையுடைய. வேதப்புலம் - வேதத்தினிடம் தலைக் கேள்வி - மிக்க வேள்வி. (16)
 
	
	| குடபுலத் தரசும் பொன்னிக் குளிர்புனற் கோழி வேந்தும் வடபுலத் தரசர் யாருங் குறுநில வாழ்க்கைச் செல்வத்
 தடல்கெழு தொண்டைத் தண்டா ரரரொடு மனிகஞ் சூழக்
 கடல்கணாற் றிசையும் பொங்கி வருவபோற் கலிப்ப வந்தார்.
 |  |