பக்கம் எண் :

செய்யுள் முதற்குறிப்பு அகவரிசை523



வளையுடைத்தோன் முதல்வன் சென்னியென் றிடியுடைப் பெருமழை யெய்தா
தேகப், பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப, மழைபிணித் தாண்ட
மன்னவன்" என்ற அடிகள் இந்திரன் முடிமேல் வளையெறிந்த படலத்தில்
உள்ள சில கதைகளையும், "வெள்ளியம்பலத்து நள்ளிருட் கிடந்தோன்" என்ற
அடி வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய கதையையும் சுட்டுகின்றன. கல்லாடர்
இயற்றிய கல்லாடம் என்ற நூலில் "கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறிப்
பொற்குவை தருமிக் கற்புட னுதவி" எனவும், "வையைக், கூலஞ்சுமக்கக்
கொற்றாளாகி" எனவும், "கரிக்குருவிக்குக் கண்ணருள் கொடுத்த" எனவும்,
"மாமியாடப் புணரியழைத்த கூடற்கிறைவன்" எனவும், "குறுநரியினத்தினை,
யேழிடந் தோன்றி யினனூற் கியைந்து, வாலுளைப் புரவி யாக்கிய பெருமான்"
எனவும் வந்துள்ள அடிகள் முறையே தருமிக்குப் பொற்கிழியளித்தது,
மண்சுமந்தது, கரிக்குருவிக்குபதேசித்தது, எழுகடலழைத்தது, நரி பரியாக்கியது
என்ற திருவிளையாடல்களைக் காட்டுகின்றன. இன்னும் அந்நூலில், இந்திரன்
பழி தீர்த்தது, திருமணம் புரிந்தது, வெள்ளியம்பலத் திருக்கூத்தாடியது,
அன்னக் குழியும் வையையும் அழைத்தது, உக்கிரகுமார பாண்டியர்
திருவவதாரம், கடல் சுவற வேல் விட்டது, கல்லானைக்குக் கரும் பருத்தியது,
அங்கம் வெட்டியது, வளையல் விற்றது, சோழனை மடுவில் வீட்டியது,
மாமனாக வந்து வழக்குரைத்தது, திருமுகம் கொடுத்தது, இடைக்காடன்
பிணக்குத் தீர்த்தது, வலை வீசியது, ஆய பல திருவிளையாடல்கள்
விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. தேவாரத் திருமுறையில் நான்மாடக்
கூடலானது, சங்கப் பலகை தந்தது, தருமிக்குப் பொற்கிழியளித்தது, வலை
வீசியது, பாண்டியன் சுரந்தீர்த்தது, சமணரைக் கழுவேற்றியது முதலியன
கூறப்படுகின்றன. மணிவாசகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருவாசகம்
திருக்கோவையார் என்ற நூல்களில் வெள்ளியம்பலத் திருக்கூத்தாடியது,
மெய்க்காட்டிட்டது, அட்டமாசித்தியுபதேசித்தது, தண்ணீர்ப் பந்தல் வைத்தது,
பன்றிக் குட்டிக்குப் பால் கொடுத்தது, கரிக்குருவிக்குபதேசித்தது, வலை
வீசியது, வாதவூரடிகளுக்கு உபதேசித்தது, நரியைப் பரியாக்கியது, மண்
சுமந்தது முதலிய திருவிளையாடல்கள் வந்துள்ளன. ஆதலால் இவ்
வரலாறுகள் பண்டைக் கால முதல் நிகழ்ந்தவையாகத் தமிழ் நாட்டில்
வழங்கியவையே என்பது தேற்றம்.

     திருவிளையாடலை மட்டும் கூறும் சிறப்பு நூல்கள்

     (4) இனி இத் திருவிளையாடல்களையே விளக்க எழுந்த நூல்கள் சில.
செல்லிநகர்ப் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவர் இயற்றிய
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், (வேம்பத்தூரர்