பக்கம் எண் :

524திருவிளையாடற் புராணம் [கூடற் காண்டம்]



திருவிளையாடல் எனப் பெயர் பெற்றது), தொண்டை நாட்டு இளம்பூர்
வீமநாத பண்டிதர் இயற்றிய கடம்பவன புராணம், தொண்டைநாட்டு வாயற்பதி
அனதாரியப்பன் இயற்றிய சுந்தரபாண்டியம், பரஞ்சோதி முனிவர் பாடிய
இத்திருவிளையாடற் புராணம். இந் நான்கு நூல்களும் மதுரைத்
திருவிளைாடல்களையே வகுத்துரைக்கும் நூல்களாம். அவற்றுள் நம்பி,
பரஞ்சோதியார் இயற்றிய இரு நூல்களுமே அறுபத்து நான்கு
திருவிளையாடல்களையும் விரித்துரைப்பன. விரிந்த நூல் பரஞ்சோதியார்
பாடிய இந்நூலேயாம்.

     முதனூல்

     (5) இந் நூலாசிரியர் பாயிரத்தில், நந்தியடிகள் வியாத முனிவற்குணர்த்த,
அவர் சூத முனிவற்குக் கூறியது பதினெண் புராணம் என்றும், அப்
பதினெட்டிற் காந்தம் என்பது ஒன்றென்றும், அக் காந்த புராணத்தில் ஒரு
பிரிவு ஈச சங்கிதை என்றும், அதில் ஆலவாய்ப் புகழ் கூறப்பட்டுள்ளது
என்றும், அவ் வடமொழி நூலைத் தென் மொழியிற் செய்க எனக் கூடற்பதி
வாழ்வோர் கூற அதனைக் கடைப்பிடித்து நான் இந்நூலை இயற்றினேன்
என்றும் விளக்கியிருப்பதால் இதற்கு முதனூல் வட மொழி நூலாகிய
ஆலாசிய மான்மியம் என்று தோன்றுகின்றது.

     ஆலாசிய மான்மியம் முதனூலாய காரணம்

     (6) இவ் வரலாறு முழுவதும் தமிழ் நாட்டினர் அறிந்து பண்டைக்கால
முதல் இலக்கியங்களினும் வரலாற்று நூல்களினும் விளக்கியிருப்பவும்
அவற்றையெல்லாம் கற்றுணர்ந்த முற்றுணர்வுடைய பரஞ்சோதி முனிவர் வட
மொழியிலுள்ள "ஆலாசிய மான்மியம்" என்ற நூலை முதனூலாகக் கொண்டு
திருவிளையாடல் பாடினரென்றல் பொருந்துமா என்பது ஆராயத்தக்கது.
ஆசிரியர் காலம், ஆரியத்தினின்று தமிழ் மொழி தோன்றிற்று என்று
கூறுவதைப் பெருமையாகக் கொண்ட காலம்; ஆரியத்தினின்று மொழி
பெயர்த்த நூல் இஃது என்றால் அந்நூலை மதித்துப் போற்றுங் காலம்; வட
மொழியே தெய்வ மொழி; தமிழ் மொழி அதன் வழி மொழி இழி மொழியென
எண்ணிய காலம்; வேதம், புராணம், ஆகமம், இதிகாசம் எல்லாம் ஆரிய
மொழியிலுள்ளவையே; அவற்றை மொழி பெயர்த்துத் தான் தமிழ் நாட்டார்
கற்க வேண்டும்; தனியாகத் தமிழ் மொழியில் ஒன்றும் இன்று என்று
பிழைபடக் கருதிய காலம்; ஆரியர்கள் சூழ்ச்சியாகத் தமிழ் நாட்டினுள்
நுழைந்து, நம் நாட்டுக் கதைகளையாய்ந்து ஆரியத்தில் வரைந்து வைத்துப்