|
ஆதலால் இத் திருவிளையாடல்
சைவமும் தமிழும் தழைத்திருக்கும் தமிழ்
நாடெங்கணும் எஞ்ஞான்றும் வழங்கியது என்பது கூறாமலே விளங்கும்.
பெயர்
(8)
இளமைப் பருவமுள்ள சிறார் சிறுமியர் கூடியாடுவதை விளையாடல்
என்று கூறுவர். மணலைக் கட்டி வளைத்துச், சிற்றில் இழைத்து, உழைத்துப்,
பலபொருள் தேடி அதன்கண் வைத்துக் காத்திருந்து, பின்னர்க் காலால்
அழித்து விடுதல் அவரியற்கை. சிந்தித்தலின்றிச் செய்யுஞ் சிறு தொழில் இது.
இது போலவே இறைவனும் முத்தொழிலும் சிந்தித்தலின்றி எளிதிற் புரிந்து
இன்புறுகின்றான். "உலகம் யாவையும் தாமுள வாக்கலும், நிலை பெறுத்தலும்,
நீக்கலும் நீங்கலா, அலகிலா விளையாட்டுடையாரவர், தலைவ ரன்னவர்க்
கேசர ணாங்களே" என்றார் கம்ப நாட்டாழ்வாரும். பத்தியிற் சிறந்த அன்பர்
பொருட்டு மதுரையிற் பல காலங்களிற் புரிந்த விளையாடல்கள்
எல்லாவற்றையும் விளக்கிய நூல் இது. ஆதலால் இந் நூலுக்குத்
திருவிளையாடற் புராணம் எனப் பெயரிட்டார் பரஞ்சோதி முனிவர். திரு -
சிறப்பு. புராணம் - பழைமை. சிறந்த விளையாடல் ஆகிய பழைமை வரலாறு
என்பது திரண்ட பொருள் எனக் காண்க.
அமைத்திருக்கும்
முறை
(9)
இவற்றை மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க்
காண்டம் என மூன்றாகப் பகுத்தார். முதலிற் கடவுள் வாழ்த்து, பாயிரம்,
அவையடக்கம் கூறி, நாட்டுப் படலம், நகரப் படலங் கூறிக் கைலாய
வருணனை கூறிப் புராண வரலாறும் விளக்கினர்.
பின்
மதுரைக் காண்டத்தில் தலம், தீர்த்தம்,
மூர்த்திச் சிறப்புக் கூறித்
திருவிளையாடல் அறுபத்து நான்கினையும் தொகத்துரைத்து அதற்குப் பதிகப்
படலம் எனப் பெயரிட்டார். பதிகத்திற் கூறிய முறைப்படி 'இந்திரன் பழி
தீர்த்தது' முதல் 'வருணன் விட்ட கடலை வற்றச் செய்தது' வரையுள்ள
பதினெட்டுத் திருவிளையாடல்களையும் விரித்துரைத்தனர். பின் கூடற்
காண்டத்தில், 'நான்மாடக் கூடலானது' முதல் 'நாரைக்கு முத்தி கொடுத்தது'
வரையுள்ள முப்பது திருவிளையாடல்களையும் முறையே வகுத்துரைத்தனர்.
திருவாலவாய்க் காண்டத்தில், 'திருவாலவாயானது'
முதல் 'வன்னியுங்
கிணறும் இலிங்கமும் அழைத்தது' வரையுள்ள பதினாறு
திருவிளையாடல்களையும் முறையே பகர்ந்தனர். முதலில் மதுரை என்று
பெயர் பெற்றது முதல் நிகழ்ந்தவைகளை மதுரைக் காண்டத்துள் அடக்கினர்.
நான்மாடக் கூடல்
|