பக்கம் எண் :

செய்யுள் முதற்குறிப்பு அகவரிசை527



எனப் பெயர் பெற்றது முதல் நிகழ்ந்தவைகளைக் கூடற் காண்டத்துட்
கூறினார். திருவாலவாய் எனச் சிறப்புப் பெயர் பெற்றது முதல்
நிகழ்ந்தவைகளைத் திருவாலவாய்க் காண்டத்துட் செப்பினர். காண்டங்களின்
அடைவும் படலங்களின் அடைவும் அவற்றிற்குக் காரணமும் ஆய்ந்து அறிக.

     பொருள்

     (10) எங்கும் நிறைந்த எல்லாம் வல்ல இறைவன் மக்கட்குத்
தெய்வவுண்மை தெரித்தல் வேண்டிப் பல தலங்களினும் தன் விளையாடலை
அன்பர்கள் காண அருள் செய்தான். மக்களாற் செய்தற்கரிய செயல் ஒன்று
ஓரிடத்தில் நிகழ்ந்தால் அதனைத் திருவருட் செயலென்றுதானே கோடல்
வேண்டும்! இறைவன் நேர் வந்து நின்று ஒரு செயலும் நிகழ்த்துவதின
்றெனினும் வியப்பான செயல் ஒன்று நிகழ்ந்தால் அது தெய்வச் செயலென்றே
மக்கள் கருதுவது இயற்கையன்றோ? இம் முறையில் நிகழ்ந்தவையே
திருவிளையாடற் கதையனைத்தும். நம் தமிழ் நாட்டிற் சிவத்தலம் ஒன்று
இருந்தால் அங்குத் திருவிளையாடல் ஒன்றிரண்டு நிகழ்ந்த சிறப்பும்
அமைந்திருக்கும். திருமால் தலங்களினும் இவை நிகழ்ந்திருத்தல் காணலாம்.
நாயனார், ஆழ்வார் எனப் பெயர் பெற்ற தொண்டர்கள் அனைவரும்
மக்களாற் செய்தற்கரிய செயல் புரிந்தோரேயாவர். அரிய செயல் நிகழ்த்திய
பெரியோர்களையும் தமிழ் நாட்டு மக்கள் பண்டைக் கால முதற் பாராட்டிக்
கோயில் அமைத்துப் பூசை திருவிழாப் புரிந்து கொண்டாடி வந்தனர்,
வருகின்றனர், வருவார். ஆயிரத்தெட்டுச் சிவத்தலங்கள் நூற்றெட்டுத்
திருப்பதிகள் இருந்தனவெனக் கூறுவதும் அதனை நன்கு விளக்கும். தில்லை,
காஞ்சி, முதலிய தலங்களில் நிகழ்ந்த திருவிளையாடல் சில; மதுரையில்
நிகழ்ந்தவை போல அருமையான செயல்களும் அல்ல; அறுபத்து நான்கிற்
குறைந்தவையே. தருமிக்குப் பொற்கிழியளித்தது, திருமுகங் கொடுத்தது,
சங்கப் பலகை தந்தது, இடைக்காடன் பிணக்குத் தீர்த்தது, வாதவூரடிகள்
பொருட்டுச் செய்த சில விளையாடல்கள் ஆகிய இவை யாவும் தமிழ்மொழிப்
பெருமையை விளக்க இறைவனியற்றியவையன்றோ? மதுரைத் திருவிளையாடல்
மக்கள் மனத்துப் பதிய வேண்டும் என்பது கருதிப் பரஞ்சோதி முனிவர் இந்
நூலையியற்றினர் என எண்ணுக. அறிஞர் அனைவரும் உலகில் நிகழுஞ்
செயல் அனைத்தையும் ஈசன் செயலாகவே கருதுவர். "என்செய லாவதி
யாதொன்று மில்லை யினித் தெய்வவமே, யுன்செய லேயென்
றுணரப்பெற்றேன்" என்றும், "ஒன்றை நினைக்கி னதுவொழிந்திட் டொன்றாகும்,
அன்றி யது வரினும்