|
செட்டியாரவர்கள்
இந் நூலுக்கு உரையெழுதி அச்சிட்டு வெளிப்படுத்தனர்.
அதன் பின்னர் அவ்வுரையையே பெரிதும் தழுவி ஈக்காடு இரத்தினவேலு
முதலியார் என்பவராற் பொழிப்புரையெழுதப் பட்டுப் புதிதாக வெளிவந்தது.
மதுரை இராமசுவாமிப் பிள்ளையவர்கள் மதுரைக் காண்டத்திற்கு மட்டும்
பொழிப்புரை எழுதி வெளிப்படுத்தினார். சில காலஞ் சென்ற பின்
திருவிளையாடற் புராணம் உரையுடன் கிடைப்பது அரிதாகத் தோன்றியது.
தமிழ்
மொழி நூல்கள் அனைத்தையும் அச்சிட்டு அழகிய வடிவிற்
புத்தகமாக்கி வழங்கித் தமிழ் மொழியையும் வைச சமயத்தையும் வளர்த்துப்
பேணி வரும் திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்
கழக அமைச்சர் ஆகிய திருவாளர் வ. திருவரங்கம்பிள்ளை யவர்கள் அந்
நூலின் அருமையையறிந்தனர். திருவிளையாடற் புராணம் முழுவதுக்கும்
நன்முறையில் உரையெழுதி வெளியிடுவது நம் நாட்டுக்கு நன்மை பயக்குஞ்
செயல் எனச் சிந்தித்துத் தெளிந்தார். இலக்கணம், இலக்கியம், சமய நூல்
முதலிய பல நூல் கற்றுத் தேர்ந்த ஆசிரியர் பண்டித. ந. மு. வேங்கடசாமி
நாட்டாரவர்களுக்குத் தெரிவித்து உரை வரைந்துதவும்படி வேண்டினர். அவர்
அதற்கிணங்கி மூன்று காண்டங்கட்கும் நல்லுரை வரைந்துதவினர்.
அவ்வுரையுடன் அச்சிட்டு மதுரைக் காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய்க்
காண்டம் என்ற மூன்றினையும் மூன்று புத்தகமாகப் பகுத்து 1927 இல்
வெளியிட்டுதவினர். அன்று முதல் இன்று வரை தமிழ் கற்பார்க்கும்
கற்பிப்பார்க்கும் அவ்வுரையுடன் கூடிய புத்தகம் நற்பயனுதவியெங்கும் உலவி
வருவது எவர்க்குந் தெரிந்ததே.
நூற்
பெருமை
(14)
திருவினையாடல் நூல்களிற் சிறப்புடையது பரஞ்சோதி முனிவர்
இயற்றிய திருவிளையாடற் புராணமே. வேம்பத்தூரார் திருவிளையாடல்
என்பது காலத்தால் இதற்கு முற்பட்டது. பழைய தமிழ் வழக்குக்களையே
தழுவிச் செல்வது. இது பிற்பட்டது; வட மொழி வழி வந்தது; வட மொழிப்
பெயர்களையே பாண்டியர்களுக்கும் கடவுளர்களுக்கும் இட்டு வழங்குவது.
இவ் வேறுபாடு இருப்பினும் முனிவர் பாடல் இனிமையும் தெளிவுமுடையது.
மோனையெதுகை முதலிய தொடை நயங்கள் அமைந்தது. பத்திச்சுவை
கனிந்தது. ஒழுகிய வோசையும் விழுமிய பொருளும் அமைந்து கற்பார்க்கு
மேன் மேலும் விழை வெழுப்புவது. இதனாலன்றோ நம்பி திருவிளையாடல்
கற்பார் சிலரும் இதனைக் கற்பார் பலரும் ஆயினர்.
|