பக்கம் எண் :

செய்யுள் முதற்குறிப்பு அகவரிசை531



ஆசிரியர் யெடுத்தாண்டிருப்பது காண்க.

     கம்பர் பாடிய இராமாவதாரத்தில் வந்துள்ள "நஞ்சினுங் கொடிய நாட்ட
மமுதினும் நயந்து நோக்கிச், செஞ்சவே கமலக் கையாற் றீண்டலும் நீண்ட
கொம்பர், தஞ்சிலம் படியின் மென்பூச் சொரிந்துடன் தாழ்ந்த தென்றால்,
வஞ்சிபோன் மருங்கு லார்மாட் டியாவரே வணங்க லாதார்" என்ற கவியின்
கருத்தினை "இம்பர்வீ டளிக்கும் தெய்வ மகளிரே என்பார் கூற்றம், வம்பல
மெய்யே போலும் வளைக்கையார் வளைப்பத் தாழ்ந்து, கம்பமுற் றடிப்
பூச்சிந்தி மலர் முகங் கண்ணீர் சோரக், கொம்பரும் பணிந்த
வென்றாலுலகியல் கூறற் பாற்றோ" என்ற கவியில் இவர் பொருத்தியிருப்பது
காண்க. இன்னும் பல நூற் கருத்துக்களும் பொருள்களும் பல விடங்களில்
வந்துள்ளன. இவை இவரது புலமையாற்றலையெடுத்துக் காட்டுவனவாம்.

கதைச் சுருக்கம்

     (1) திருவாலவாயான படலம் : கீர்த்தி பூடண பாண்டியன்
மதுரையாண்ட நாளில் கருங்கடலேழும் திரண்டெழுந்து வந்து வெள்ளமாகிப்
புவியனைத்தையும் மூடி யழித்தொழிந்தது. பின் வெள்ளம் வற்றியபோது
மதுரையில் அங்கயற்கண்ணி திருக்கோயிலும், இந்திர விமானமும்,
பொற்றாமரை வாவியும், இடபக்குன்றமும், யானை மலையும், நாக மலையும்,
பசு மலையும் பன்றி மலையும் அழிவின்றியிருந்தன. வங்கிய சேகரன் பிறந்து
வளர்ந்து ஆளத் தொடங்கினன். ஆதியின் மதுரை நகரமைந்திருந்த எல்லை
காணக் கருதி இறைவனை இறைஞ்சினான். இறைவன் ஒரு சித்தராய் வந்து
தங்கங்கணமாக அமைந்திருந்த பாம்பினை ஏவி எல்லை காட்டும்படி
பணித்தார். அப் பாம்பு உடலை வளைத்து வாயில் வால் பொருந்தும்படி
புரிந்து முன்னுள்ள எல்லையைத் தன் ஆலவாயான் அளந்து காட்டியது.
அன்று முதல் ஆலவாய் எனச் சிறப்புப் பெயர் பெற்றது.

     (2) சுந்தரப்பேரம் பெய்த படலம் : வங்கியசேகர பாண்டியன் அரசு
புரிந்தபோது விக்கிரம சோழன் என்பவன் போர் புரியக் கருதி வந்து, நிரை
கவர்ந்து, குளம் ஏரிகளையுடைத்துப் பல குறும்பு செய்தனன். சோழனது
படைப் பெருமை கண்டு, பாண்டியன் அஞ்சி, இறைவனை வணங்கிக்
குறையிரந்து வேண்டினன். அப்போது இறைவன் "நீ சென்று, வந்த
சோழனுடன் போர் புரிவாய்; நாம் வந்து உதவி புரிவோம். வெற்றி உனக்குக்
கிட்டும்" என்று அசரீரியாய் நின்று கூறினன். கூறியபடியே வந்து உதவி