|
என்றும் கற்பித்துக்
கூறுவது காணக் காண வியப்பூட்டுங் காட்சியன்றோ?
காதலி தன் கைக்கு எட்டாத கொம்பை வளைத்து மலர் பறிக்க எண்ணி
நிற்பது கண்டு, காதலன் "ஏன் எய்க்கின்றாய்; என் தோள்மேல் ஏறி மலர்
பறித்துக் கொள்" எனக் கூறி அவளைத் தோளில் ஏந்தி நின்றான் என்றும்,
எட்டாத ஒரு கொம்பை வளைத்துப் பிடித்து "ஊடிய மகளிர் போல வளைக்க
வளைக்க நில்லாது மேலோடுகிறதோ? நான் பற்றிக் கொள்கிறேன்; மலர்
முழுவதும் பறித்துக்கொள்" என்றுரைத்து நின்றான் என்றும் இயம்புவது
காதலன்புடையார் இயற்கைப் பண்பினையெடுத்துக் காட்டுவதாம்.
புதுமது
நுகரப் புக்க மைந்தரும் மகளிரும் மயங்கியறியாது புரியுஞ்
செயல்களாக ஆசிரியர் கூறுவதையும் ஆங்குக் காணலாம். மங்கையொருத்தி,
வள்ளத்திலுள்ள கள்ளிற் சந்திரன் சாயை தோன்றக் கண்டு "சந்திரா! என்
காதலன் பிரிந்த காலத்து நீ கனல் போல் என்னைக் காய்ந்தனை; இன்று
என் வள்ளத்திற்குள் வந்தகப்பட்டாய்; உன்னை யினிவிடமாட்டேன்; எங்கும்
போகாமல் இங்கே படுத்திரு" என்று கூறி அதன்மேல் ஒரு வள்ளத்தை
வைத்து மூடினள் என்பதும், கள்ளுண்டு களித்த காரிகையொருத்தி, கையில்
ஆடியெடுத்து நோக்கிக், கண் சிவப்பும் செவ்வாய் வெளுப்புங் கூர்ந்து
நோக்கி, "என்னைப் புணர்ந்து இன்ப நலம் துய்த்து வஞ்சகமாக மறைந்து
செல்கின்றான் ஒருவன். அவன் யார் என நான் அறியேன்" என்று மயங்கி
வாய் பிதற்றுகின்றான் என்றும் முனிவர் மொழிந்தது கட்குடி மயக்கத்திற்குக்
காட்டாவனவே! அன்றியும், மது வுண்டு மயங்கிய மங்கையொருத்தி, ஆடியில்
தன் வடிவத்தைக் கண்டு ஐயுற்று "நானோ அல்லனோ" என்றுரைப்பதும்,
"என்னைக் கைப்பற்றி எவரோ கொண்டோடிவிட்டார். என் கணவன்
வந்தென்னைத் தேடினால் யான் என்ன செய்வேன் தோழி! என்னை
விரைவில் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வா" என்று சேடியை நோக்கிக்
கூறுவதும், மற்றொருத்திதான் கள்ளுண்ணும் வள்ளத்தில் தன்பின்
ஒளித்திருந்தகாதலனுருவந் தோன்றக் கண் சிவந்து நோக்கி "அயலாள்
ஒருத்தியைத் தோய்ந்து இன்ப நுகர்ந்து இருக்கின்றனையோ" என்று கூறிச்
சினங்கொண்டு வள்ளத்தை யுதைத்துச் சிதைத்தாள் என்றும் செப்பியயவற்றை
யாய்ந்தால் எவர்க்கும் நகைப்பு மிகைப்படுமன்றோ? நகைச்சுவை நயப்போர்
உண்டாட்டுச் செயல்களை ஊன்றி நோக்குக.
புஇப்பூங்
கொம்பும் "ஊடிய மகளிரேயே கொய்யென வளைத்து
நின்றாள்" காதலன்; "கண் முத்தங்கொழிப்ப நின்றாள்" காதலி எனவும்,
|